AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

E. V. Velu Tamil Nadu Election: அதிமுக டூ திமுக.. எ.வ.வேலு கோட்டையாக திகழும் திருவண்ணாமலை… மீண்டும் வெற்றிக் கொடியை பறக்கவிடுவாரா!

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் அரசியல் பயணம் தொடங்கி திமுகவில் அமைச்சராக வெற்றி நடை போட்டு வரும் எ.வ.வேலு வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தனுது வெற்றிக் கொடியை பறக்க விடுவாரா. இதன் மூலம் 7- ஆவது முறை எம்.எல்.ஏவாக வெற்றியை பதிவு செய்வாரா.

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 14 Mar 2026 19:41 PM IST
தமிழகத்தில் பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்  துறை அமைச்சராக இருந்து வருபவர்  எத்திராஜுலு  வேலு என்ற  எ. வ. வேலு.  இவர்,  கடந்த  1951- ஆம் ஆண்டு மார்ச் 15- ஆம் தேதி எத்திராஜுலு நாயுடு- சரஸ்வதி தம்பதிக்கு மகனாக பிறந்தார். ஆரம்ப காலத்தில் பம்பு செட் பழுது பார்க்கும்   வேலை பார்த்து வந்த  இவர்,  எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும்,  திருவண்ணாமலை  எம்ஜிஆர்  திமுக ரசிகர் மன்ற உறுப்பினராகவும்,  தொண்டராகவும்  இருந்து வந்தார்.

1 / 5
இதைத்தொடர்ந்து,  தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். பின்னர்,  அரசியல் ஆர்வம் காரணமாக  அதிமுகவில் இணைந்ததுடன், அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பாவூர் சண்முகமத்துக்கு  உதவியாளராக தனது அரசியல்  வாழ்க்கையை தொடங்கினார். அப்போது,  எம்ஜிஆர் உடன் நெருக்கமாக  பழகி வந்த  எ. வ. வேலு  கடந்த 1984- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதியில்  முதல் முறையாக  களமிறங்கி தனது வெற்றியை பதிவு செய்து எம்எல்ஏவாக தேர்வானார்.

2 / 5
இதை தொடர்ந்து,  எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு  பாக்யராஜின் எம். ஜி. ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியில் இணைந்து அதன் கொள்கை பரப்புச் செயலாளராக  மாறினார். இதன் பின்னர்,  1995- ஆம் ஆண்டு  திமுகவில் இணைந்த  எ. வ. வேலு தற்போது வரை அந்த கட்சியில்  செயலாற்றி வருகிறார்.  அந்த கட்சியிலும்  கடந்த 2001 மற்றும் 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில்  தண்டராம்பட்டு தொகுதியில்  களமிறங்கிய  எ. வ. வேலு  வெற்றியை  நிலைநாட்டினார். தொடர்ந்து,  2011,  2016  மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில்  அதே தொகுதியில்  போட்டியிட்டு தனது வெற்றி கொடியை  தொடர்ந்து  பறக்க விட்டு வருகிறார்.

3 / 5
இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர்  மு. கருணாநிதி  ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில்  2006 முதல் 2011 வரை உணவுத்துறை அமைச்சராக இருந்தார். இதில்,  சில காலம்  கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.  இதைத்தொடர்ந்து  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  எ. வ. வேலு  முதல்வர் மு. க. ஸ்டாலின்  அமைச்சரவையில்  பொதுப் பணித் துறை அமைச்சராக பொறுப்பேற்று  செயலாற்றி  வருகிறார்.

4 / 5
கடந்த 1984- ஆம் ஆண்டு முதல்  கடந்த 2021 ஆம் ஆண்டு வரை  திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு ஆகிய தொகுதிகளில்  தோல்வியின்றி  தொடர்ச்சியாக தனது வெற்றி கொடியை நாட்டி  தடம் பதித்து வருகிறார்.  வருகிற சட்டமன்ற தேர்தலிலும்,  திருவண்ணாமலை தொகுதியில்  எ. வ. வேலு  களமிறங்க  அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கான  வெற்றி வாய்ப்பும்  அதிகளவு இருக்கும் என்று  கட்சியினர் கூறுகின்றனர்.

5 / 5
Follow Us