திமுகவுடன் கூட்டணி பேசியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? – எஸ்.பி. வேலுமணி கேள்வி
தொண்டாமுத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எஸ்.பி. வேலுமணி, “தவெகவுக்கு ஆதரவளித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுக கூட்டணி பேசியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?” என கேள்வி எழுப்பினார்.
சென்னை, ஆகஸ்ட் 9 : கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 9, 2026 இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எஸ்.பி. வேலுமணி, “தவெகவுக்கு ஆதரவளித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுக கூட்டணி பேசியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?” என கேள்வி எழுப்பினார்.
திமுகவுடன் கூட்டணி பேசியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
மேலும் பேசிய அவர், திமுக – அதிமுக கூட்டணி என்பதுதான் பிரச்னையில் ஆரம்பம். தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஆனால், திமுக எதிர்ப்பின் காரணமாகவே தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தோம். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது” என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : “கோயிலுக்கு வருவது மன அமைதிக்காகத்தான்!”.. செப்.1 முதல் செல்போன்களுக்கு தடை.. ஸ்டிரிக்ட்டாக சொன்ன அமைச்சர் ரமேஷ்!!




இதற்கிடையில் சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும், அவர்களின் பேசி கட்சியை பலத்தப்படுத்த வேண்டும் என பழனிசாமிக்கு வேலுமணி, விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து கடிதம் எழுதி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராகிய நீங்கள், கட்சியை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், 47 சட்டமன்ற உறுப்பினர்களில், 25 சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தவறு என்பதை, சுட்டிக்காட்டினர்.
மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்கள் சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் ஒத்துக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசினப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அன்று டிடிவி தினகரன் அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம், என்று நிராகரித்தீர்கள்.
இதையும் படிக்க : நாட்டையே அதிரவைத்த ‘மணி மியூல்’ சைபர் மோசடி.. தமிழகம் முழுவதும் 800 பேர் கைது!!
‘சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்’
அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களை அதே பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். சசிகலா, டிடிவி தினகரனிடம் பேசி கட்சியில் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். 6 மாதத்தில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன் அதிமுகவை பலபடுத்தியே ஆக வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.