Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை மக்களே அலர்ட்.. மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

Coimbatore Madukkari Toll Plaza : கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூர் - மதுக்கரை இடையிலான 27 கிலோ மீட்டர் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இதனால், அவ்வழியில் இருந்த 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு, மதுக்கரை சுங்கச்சாவடி மட்டும் செயல்படுகிறது. இந்த நிலையில், அதற்கான புதிய சுங்கச்சாவடி கட்டணம் வெளியாகி உள்ளது.

கோவை மக்களே அலர்ட்.. மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
மதுக்கரை சுங்கச்சாவடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Aug 2025 07:49 AM

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 01 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் இருந்த ஐந்து சுங்கச்சாவடிகள் மூடப்பட்ட நிலையில், மதுக்கரை சுங்கச்சாவடிக்கு புதிய கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்த கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டமும் ஒன்று. கோயம்புத்தூர் மாவட்டத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது- குறிப்பாக, சாலைகளை விரிவாக்கம் செய்யும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, நீலாம்பூர் – மதுக்கரை இடையிலான 27 கிலோ மீட்டர் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த பைபாஸ் சாலையில் நகரத்திற்குள் வராமல், திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றனர்.

இந்த சாலை இருவழிப்பாதையாக இருப்பதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், பல ஆண்டுகளாக இதனை நான்கு வழிப்பாதையாக மாற்றக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் நடைபெறுகிறது. இந்த சாலையை எல் அண்டு டி நிறுவனம் பரமாரித்து சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறது. இங்கு சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெறுவதால்,  நீலாம்பூர் – மதுக்கரை இடையே 6 சுங்கச்சாடிவகள் இருந்தன. இதனை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.

Also Read : சிறை டூ அபராதம்.. பெண்களை மிரட்டினால் அவ்வளவு தான்… காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு!

நீலாம்பூர் சுங்கச்சாவடி, சிந்தாமணிபுதூர் அருகே உள்ள 2 சுங்கச்சாவடி என மொத்தம் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டது. எனவே,  மதுக்கரை சுங்கச்சாவடி மட்டுமே செயல்படுகிறது.   இந்த  சாலையில் வரும் வாகனங்களுக்கு மதுக்கரை சுங்கச்சாவடிகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.  இந்த நிலையில்  அதற்கான புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடை சுங்கச்சாவடியில் புதிய கட்டணம்

தேசிய நெடுஞ்சாலை விதி 2008ன்படி வாகனங்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கோவை குடியிருப்பாளர்களுக்கு மதுக்கரை சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றவில் இருக்கும் வணிகம் அல்லாத வாகனங்களுக்கு ரூ.350 சலுகை விலையில் மாதாந்திர பாஸை பெற்றுக் கொள்ளலாம்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வணிக வாகனங்கள் இலகுரக வாகனங்களுக்கு ரூ.20 முதல் பெரிய வாகனங்களுக்கு ரூ.115 வரை தள்ளுபடி விலையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணங்களுக்கு 25 சதவீத தள்ளுடிபயும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வணிக வாகனங்கள் (தேசிய அனுமதியின் கீழ் இயங்கும் வாகனங்கள் தவிர) 50 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும்.

Also Read : வாகன ஓட்டிகளே அலர்ட்… சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!

மேலும், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக சுமை ஏற்றப்பட்ட எந்தவொரு வாகனமும் பொருந்தக்கூடிய கட்டண விகிதத்தை விட 10 மடங்கு அதிகமாக சுங்கக் கட்டணம் செலுத்தி, நெடுஞ்சாலையை பயன்படுத்த வேண்டும். மேலும், கார், ஜீப், வேன், இலகுரக மோட்டர் வாகனங்களுக்கு ஒரு பயணத்திற்கு ரூ.35, ஒரே நாளில் திரும்புவதற்கு ரூ.55, பஸ் அல்லது டிரக் வாகனங்களுக்கு ஒரு பயணத்திற்கு ரூ.125, ஒரே நாளில் திரும்புவதற்கு ரூ.185, 3 சக்கர கொண்ட வணிக வாகனத்துக்கு ஒரு பயணத்திற்கு ரூ.135, ஒரே நாளில் திரும்பும் வாகனத்திற்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது.