சிறை டூ அபராதம்.. பெண்களை மிரட்டினால் அவ்வளவு தான்… காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு!
Tirunelveli Police : பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்து வரும் சூழலில், நெல்லை மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தினாலோ, பின்தொடர்ந்தாலோ மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, ஜூலை 31 : பாதிக்கப்பட்ட பெண்களை பின் தொடர்ந்து சென்றாலோ, தொந்தரவு செய்தாலோ, அச்சுறுத்தல் செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என நெல்லை மாவட்ட காவல்துறை (Tirunelveli Police) தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்து வரும் சூழலில், இந்த அறிவிப்பை நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்கள தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பலரும் உயிரிழந்து வருகின்றனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சூழலில், நெல்லை மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்களை பின் தொடர்ந்து சென்றாலோ, தொந்தரவு செய்தாலோ, அச்சுறுத்தல் செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Also Read : திருப்பூரில் பயங்கரம்.. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. பகீர் பின்னணி!
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், பெண்கள் மீதான தொடர்ச்சியான தொல்லை மற்றும் அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் (TNPHW ஆனது Act) புதிய திருத்தமான (Amendment) பிரிவு 7(C) அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களை மிரட்டினால் 3 ஆண்டு ஜெயில்
🎯 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.
📢 பத்திரிகை செய்தி.
📌 தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் புதிய பிரிவு 7(C) – பெண்கள் பாதுகாப்புக்கான ஒரு முக்கிய நடவடிக்கை.https://t.co/bBJVcbtBCG#tirunelvelidistrictpolice #TNPolice #SouthZoneTNpol #nellailife pic.twitter.com/IfngsZN3Ki
— Tirunelveli District Police (@TindistPolice) July 30, 2025
பாதிக்கப்பட்ட பெண்களை பின் தொடர்ந்து சென்றாலோ, தொந்தரவு செய்தாலோ அச்சுறுத்தல் செய்தாலோ அல்லது வேறு எந்த வகையிலாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அப்பெண்ணுக்கு தொல்லை செய்தாலோ அல்லது இணைய வழி மூலம் அப்பெண்ணை பின் தொடர்ந்தாலோ, தொடர்பு கொண்டாலோ அல்லது தொந்தரவு செய்யும் விதத்தில் நடந்து கொண்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்ற வகையில் சட்டத்தில் தீர்வுகள் உள்ளன.
Also Read : ’கார் சாவியை அஜித்குமார் வாங்கவில்லை’ – காவலாளி முருகன்.. மடப்புரம் வழக்கில் புதிய திருப்பம்..
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த புதிய சட்டப்பிரிவு TNPHW Act Section 7(C), ஒரு முக்கிய தடுப்பு கருவியாக விளங்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மீதான குற்றங்களை விரைவாக கட்டுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் உதவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.