Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’கார் சாவியை அஜித்குமார் வாங்கவில்லை’ – காவலாளி முருகன்.. மடப்புரம் வழக்கில் புதிய திருப்பம்..

Sivaganga Custodial Death: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கோவிலுக்கு வந்த நிகிதாவிடம் கார் சாவி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அந்த கார் சாவியை மற்றொரு காவலர் முருகன் நிகிதாவிடம் இருந்து பெற்று அதனை அஜித்குமாரிடம் கொடுத்ததாக பேட்டி அளித்துள்ளார்.

’கார் சாவியை அஜித்குமார் வாங்கவில்லை’ – காவலாளி முருகன்..  மடப்புரம் வழக்கில் புதிய திருப்பம்..
அஜித் குமார் - முருகன்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jul 2025 06:30 AM

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரத்தில் அஜித் குமார் என்ற இளைஞர் காவல் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் மற்றும் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கின் புதியதாக ஒரு திருப்புமுனை வெளியாகி உள்ளது. அதாவது அஜித் குமார் கோவிலுக்கு வந்த நிகிதாவிடம் கார் சாவி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அந்த கார் சாவியை மற்றொரு காவலர் முருகன் நிகிதாவிடம் இருந்து பெற்று அதனை அஜித்குமாரிடம் கொடுத்ததாக பேட்டி அளித்துள்ளார். மடப்புரம் பகுதியில் இருக்கக்கூடிய கோவிலில் நிகிதா என்பவர் தனது தாய் சிவகாமியுடன் காரில் வந்திருந்தார். அப்போது அந்த காரை பார்க் செய்வதற்காக கோவில் காவலாளியான அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும் அப்போது அந்த காரில் இருந்து பத்து சவரன் நகை திருட்டுப் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு பின்னணி என்ன?

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அஜித்குமாரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் அப்போது விசாரணையின் போது அவரை அடித்து துன்புறுத்தி, மிகவும் மோசமான முறையில் நடத்தியதாகவும், இதனால் மூளையில் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த விசாரணையில் ஈடுபட்ட ஐந்து காவல் துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

சிபிஐ விசாரணை:

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து 15 வது நாளாக சிபிஐ தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூலை 28, 2025 தேதி ஆன நேற்று ஏழு பேர் கொண்ட குழு அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தம்பி நவீன் குமார் மற்றும் தாய் மாலதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆதார் மற்றும் பிற ஆவணங்களுக்காக புகைப்படம் தேவை என இருவரையும் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: போதைப்பொருள் பழக்கம்.. போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய இருவர்..

கார் சாவியை அஜித்குமார் வாங்கவில்லை – கோயில் காவலாளி முருகன்:

இந்த நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக, கோவில் காவலாளி முருகன் தான், முதலில் நிகிதாவிடம் இருந்து கார் சாவியை பெற்றதாக பேட்டி அளித்துள்ளார். அதாவது நிகிதா தாய் சிவகாமியுடன் கோவிலுக்கு காரில் வந்துள்ளார். உடனடியாக அஜித்குமார் தன்னிடம் வந்து காரில் சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறார்கள் ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:  காதல் விவகாரம்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்து படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்!

அதனைத் தொடர்ந்து, நிகிதாவிற்கு கோவில் பிரசாதமான புளியோதரை வழங்கியதாகவும், பின்னர் கார் பார்க் செய்வதற்காக நிகிதா தன்னிடம் சாவியை கொடுத்ததாகவும் அந்த சாவியை அஜித்குமாரிடம் கோவில் காவலாளி முருகன் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார். முதலில் கார் சாவியை அஜித்குமார் தான், வாங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்றொரு கோயில் காவலாளி இதனை தெரிவித்துள்ளார். அதேபோல கார் பார்க் செய்வதற்காக அஜித்குமார் அந்த கார் சாவியை யாரிடம் கொடுத்தார் என்பது தனக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.