ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படம் கடந்த 2014ல் வெளியானது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் சட்ட சிக்கல் ஒன்றை சந்தித்துள்ளார். விளம்பர நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல், கொடுத்த காசோலை 'பவுன்ஸ்' ஆன வழக்கில், தயாரிப்பாளர் இரண்டரை கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இல்லையென்றால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.