AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தல்…. விஜய் கண்டனம்

Infant Kidnapped in Trichy : திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் குழந்த கடத்தப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே குழந்தை பறிபோகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தல்…. விஜய் கண்டனம்
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Feb 2026 15:00 PM IST

திருச்சி, பிப்ரவரி 14 : திருச்சிராபள்ளி (Tiruchirappalli) மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி சுகன்யாவுக்கு கடந்த பிப்ரவரி 11, 2026 அன்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் அவருக்கு துணையாக அவரது உறவினர் இருந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் சுகன்யாவிடம் மீனாட்சி என்ற பெண் நன்கு பழகி வந்துள்ளார். பிப்ரவரி 14, 2026 இன்று காலை குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த சுகன்யா எடுத்து சென்ற நிலையில், தான் தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என்று மீனாட்சி வாங்கி சென்றுள்ளார். அவரது உறவினரும் அப்போது சுகன்யாவுடன் இல்லை என கூறப்படுகிறது.

பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தல்

இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் சுகன்யாவிற்கு பயம் அதிகரித்திருக்கிறது. மருத்துவமனையில் விசாரித்தபோது முறையான தகவல் இல்லை. இதனையடுத்து மருத்துவமனை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. சுகன்யாவின் குடும்பத்தினரும் அருகில் இருந்தவர்களிடம் அந்த பெண் குறித்து விசாரித்துள்ளனர். யாருக்கும் அந்தப் பெண் குறித்து தகவல் தெரியவில்லை. இதனையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை சுகன்யா உணர்ந்திருக்கிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : தவெக விருப்ப மனு வழங்க கால அவகாசம் நீட்டிப்பு..

இதனையடுத்து தனது குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சுகன்யா புகார் தெரிவித்துள்ளாார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு, குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்ட மற்ற பெண்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கண்டனம்

இந்த சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.

இதையும் படிக்க : விஜய்-த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து…தவெகவினர் கடும் கண்டனம்!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us