Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 10 மாத குழந்தை.. கேரளாவில் மனதை உலுக்கும் சம்பவம்!

10 Months Old Baby Girl Gives Life To 5 In Kerala | கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த 10 மாத குழந்தை உடல் உறுப்பு தானம் செய்து 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது.

உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 10 மாத குழந்தை.. கேரளாவில் மனதை உலுக்கும் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Feb 2026 11:02 AM IST

மல்லப்பள்ளி, பிப்ரவரி 14 : கேரளாவில் (Kerala) 10 வயது பெண் குழந்தை ஒன்று உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை தற்போது 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 10 வயது குழந்தை உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த குழந்தை

கேரள மாநிலம், பத்தினம்திட்ட மாவட்டத்தில் உள்ள, மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்த குழந்தை ஏலின் ஷெரின் ஆப்ரகாம். 10 மாதங்களே ஆன இந்த பெண் குழந்தை பிப்ரவரி 05, 2026 அன்று மிக கடுமையான சாலை விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் குழந்தை பலத்த காயமடைந்த நிலையில், குழந்தையுடன் பயணம் செய்த அவரது தாய் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு…அம்ரித் பாரத் ரயில்களில் புதிய வசதி…ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!

மூளை சாவு அடைந்த பச்சிளம் குழந்தை

கோட்டயத்தில் இருந்து திருவள்ளா நோக்கி அந்த குடும்பத்தினர் காரில் சென்றுக்கொண்டு இருந்த நிலையில், எதிரே வந்த கார் மோதியதில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. விபத்தை தொடார்ந்து அந்த குழந்தை சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள அம்ரித்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிப்ரவரி 13, 2026 அன்று அந்த குழந்தை மூளை சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : நாடு முழுவதும் இன்று ஸ்டிரைக்.. என்னென்ன சேவைகள் பாதிக்கும், என்ன சேவைகள் கிடைக்கும்?

இந்த நிலையில், குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அவர்களின் ஒப்புதலின் அடிப்படையில் குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய குழாய்கள் மற்றும் இரண்டு கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகள் 6 மாத குழந்தை உட்பட 5 பேருக்கு வாழ்க்கை அளிக்க உள்ளது.

இந்த சம்பவத்தின் மூலம் கேரளாவில் மிக குறைந்த வயதில்  உடல் உறுப்பு தானம் செய்த நபராக 10 மாத குழந்தை ஏலின் ஷெரின் ஆப்ரகாம் மாறியுள்ளது. இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.