AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு…அம்ரித் பாரத் ரயில்களில் புதிய வசதி…ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!

Vande Bharat Train: வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் பயணிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், அவசர கால இட ஒதுக்கீட்டை பயணிகள் இனி பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும். இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு…அம்ரித் பாரத் ரயில்களில் புதிய வசதி…ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!
அம்ரித் பாரத் ரயில்களில் அவரச கால இட ஒதுக்கீடு அறிவிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Feb 2026 10:01 AM IST

இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் அனைத்து அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களில் அவசர கால இட ஒதுக்கீட்டை (விஐபி ஒதுக்கீடு) அறிமுகப்படுத்துவதற்கு இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் பொது பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளுடன் அமிரித் பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயில்களில் ஆரம்பத்தில் பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் டியூட்டி பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதில், அவசர ஒதுக்கீட்டின் கீழ், 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளுடன் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களில் அவசர ஒதுக்கீட்டின் கீழ், 24 இருக்கைகள் இருக்கும். 7 ஸ்லீப்பர் பெட்டிகளுடன் தன் பாத் வழியாக இயக்கப்படும் ஹவுரா- ஆனந்த் விஹார் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: கொட்டும் பனியில் பிரச வலியில் தவித்த கர்ப்பிணி.. தோலில் சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்!

அவசர கால இட ஒதுக்கீட்டு குறித்து ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

  • வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் அவசர கால ஒதுக்கீடு வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மாறுபடும்.
  • வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில், அவசர கால ஒதுக்கீடு பெட்டி வகைகளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை சாதாரண நாட்களுக்கும், வார இறுதி நாட்களுக்கும் இடையில் வேறுபடும்.
  • முதல் ஏசி வகுப்பு: சாதாரண நாட்களில் 4 இருக்கைகள், வார இறுதி நாள்களில் 6 இருக்கைகள்.
  • இரண்டாவது ஏசி வகுப்பு: சாதாரண நாட்களில் 20 இருக்கைகள், வார இறுதி நாட்களில் 30 இருக்கைகள்.
  • மூன்றாம் ஏசி வகுப்பு: சாதாரண நாட்களில் 24 இருக்கைகள், வார இறுதி நாட்களில் 42 இருக்கைகள்.
  • இந்த ஒதுக்கீடுகளை முன்பதிவு காலத்தின் போது அல்லது முன்பதிவு முடிவடையும் தேதிக்கு முன், எது முந்தையதோ அதுவரை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல ரயில்வே நிலையங்களுக்கும் அனுமதி

அவசர கால ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய மண்டல ரயில்வேகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை போலவே, மண்டல ரயில்வே களும் தேவை முறைகள் மற்றும் இருக்கை கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் இந்த ரயில்களில் நிலையான அவசர கால ஒதுக்கீட்டை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, அதற்கு ஏற்ப தேவையான மாற்றங்களை செய்யலாம் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது. இந்தியன் ரயில்வேயின் இந்த முக்கிய அறிவிப்பால் அம்ரித் மற்றும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த பயன் அடைவார்கள்.

மேலும் படிக்க: நாடு முழுவதும் இன்று ஸ்டிரைக்.. என்னென்ன சேவைகள் பாதிக்கும், என்ன சேவைகள் கிடைக்கும்?

Follow Us