Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 திருமணம், 5 குழந்தைகள், ரூ.2 கோடி கடன்.. மூன்று சகோதரிகள் தற்கொலை வழக்கில் வெளியான முக்கிய தகவல்கள்!

Ghaziabad Three Sisters Self Killing Case | உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் திருமணங்கள், கடன், மன அழுத்தம் என இந்த தற்கொலை சம்பவத்திற்கு பின்னாள் பல்வேறு விஷயங்கள் உள்ளன.

3 திருமணம், 5 குழந்தைகள், ரூ.2 கோடி கடன்.. மூன்று சகோதரிகள் தற்கொலை வழக்கில் வெளியான முக்கிய தகவல்கள்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Feb 2026 08:02 AM IST

புதுடெல்லி, பிப்ரவரி 10 : உத்தர பிரதேசத்தின் (UP – Uttar Pradesh) காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் அந்த சிறுமிகளின் தந்தை மற்றும் குடும்பம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மன அழுத்தம், குடும்ப சூழல், பண சிக்கல் என பல்வேறு சிக்கல்கள் இந்த வழக்கில் உள்ளன. இந்த நிலையில், சிறுமிகள் தற்கொலை விவகாரத்தில் வெளிவந்துள்ள அந்த சில முக்கிய தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சகோதரிகள்

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் உள்ள பாரத் சிட்டி குடியிருப்பில் வசித்து வந்த பாகி (வயது 12), பிராச்சி (வயது 14) மற்றும் நிஷிகா (வயது 16) ஆகியோர் தாங்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டனர். அந்த சிறுமிகள் தாங்கள் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தனர். அதில், தங்களால் கொரியன் கலாச்சாரத்தை பின்பற்ற முடியாமல் போனதால் இந்த முடிவை எடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

இதையும் படிங்க : எதிரிகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் திறன்…இந்தியாவுக்கு கிடைத்துள்ளது!

சிறுமிகள் தற்கொலை விவகாரம் – வெளியான முக்கிய தகவல்கள்

இந்த சிறுமிகளின் தந்தை குமார் தொடர்ச்சியாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவர் சுஜாதா, ஹினா மற்றும் டீனா என மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த மூன்று பெண்களுக்கு 5 பிள்ளைகள் இருந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு சுஜாதாவை திருமணம் செய்த அவர், சுஜாதாவின் தங்கை ஹினாவை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு தன்னுடன் பணியாற்றிய டீனா என்ற பெண்ணையும் அவர் திருமணம் செய்துள்ளார்.

இதையும் படிங்க : 30 ஆண்டுகள் சிறை.. நிரபராதி என கூறி விடுதலை.. அடுத்த நாளே உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

இந்த மூன்று பெண்களும் புகார் அளிக்காத நிலையில், விவாகரத்து செய்யாமல் அடுத்தடுத்து திருமணம் செய்துக்கொண்டது குறித்து அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது. குமார் தனது மகள்களின் செல்போனை பிடுங்கி விற்பனை செய்த நிலையில், கொரியன் கலாச்சாரத்தை பின்பற்ற முடியாத மன விரக்தியில் அந்த சிறுமிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

மின்சார கட்டணம் செலுத்த மகள்களின் ஸ்மார்ட்போனை விற்ற குமார்

குமாருக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமான கடன் இருந்த நிலையில், அவர் மிக கடுமையான நிதி சிக்கலில் இருந்துள்ளார். இந்த நிலையில், வீட்டின் மின்சார கட்டணம் செலுத்த அவர் மகள்களின் ஸ்மார்ட்போனை பிடுங்கி விற்பனை செய்துள்ளார். அவர் ஸ்மார்ட்போனை விற்பனை செய்த அடுத்த 15 நாட்களில் மூன்று சகோதரிகளும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். நிதி சிக்கல் காரணமாக கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு குமார் தனது மகள்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் அவரின் வீட்டின் 30 பக்கங்கள் அடங்கிய சிறுமிகளின் டைரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தீவிரம் எடுத்துள்ளது.