AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எதிரிகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் திறன்…இந்தியாவுக்கு கிடைத்துள்ளது!

Spy On Enemy Satellites: இந்தியாவில் எதிரிகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தில் வெற்றி கிடைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள அஜிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிட்டெட் மேற்கொள்ளப்பட்ட 2 முயற்சிகளில் வெற்றி கிடைத்ததை அடுத்து, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு வழி கிடைத்துள்ளது.

எதிரிகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் திறன்…இந்தியாவுக்கு கிடைத்துள்ளது!
எதிரிகளின் செயற்கைகோள்களை உளவு பார்க்கும் திறன்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 08 Feb 2026 14:38 PM IST

இந்தியாவில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த செயற்கை கோள்கள் மூலம் தகவல் தொடர்பு, வழி செலுத்துதல், பூமி குறித்த கண்காணிப்பு மற்றும் மூலோபாய பயன்பாடுகள் என பல்வேறு துறைகளுக்கு பயன்பட்டு வருகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் தனியார் விண்வெளி துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அகமதாபாத் தளமாக கொண்ட அஜிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், அதன் விண்வெளி துறை மூலம் மற்றொரு செயற்கைக்கோளில் இருந்து சுற்றுப் பாதையில் உள்ள பொருட்களை படம் பிடிக்கும் புதிய உள்நாட்டு திறனை கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஒரு இந்திய தனியார் துறைக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். மேலும், இந்தியாவின் விண்வெளி சூழ்நிலைக்கு முக்கிய படிக்கல்லாகும். இது செயற்கை கோளின் சுற்றுப்பாதையை உளவு பார்த்தல் என்று அழைக்கப்படுகிறது.

விண்வெளி நிலையத்தில் படம் பிடிப்பு

கடந்த பிப்ரவரி 3-ஆம் 80 கிலோ கிராம் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏ எஃப் ஆர்- ஐ பயன்படுத்தி, அஜிஸ்டா சர்வதேச விண்வெளி நிலையத்தில் படங்களை வெற்றிகரமாக படம் பிடித்துள்ளது. இது ஒரு பெரிய மற்றும் ஒப்பீட்டளவில் எளிதில் கண்காணிக்க கூடிய சுற்றுப்பாதை பொருளாகும். குறைந்த பூமி சுற்று பாதையில் மிகவும் புலப்படும் மற்றும் கூட்டுறவு இலக்குகளில் ஒன்றாக இருந்தாலும், இந்த சோதனை இந்தியாவின் தனியார் துறைக்கு ஒரு முக்கியமான ஆரம்பத்தை குறிக்கிறது. இது உலக அளவில் மூலோபாய ரீதியாகவும், நெருக்கமாகவும் கவனிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: எஸ்எஸ்சி 13-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு…67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தக் கட்டத்துக்கு தகுதி!

2 முயற்சிகளில் ஏஎஃப்ஆர் செயற்கை கோள்

சவாலான அடிவானம் மற்றும் சூரிய ஒளி நிலைமைகளின் கீழ், அஜிஸ்டா 2 சுயாதீன இமேஜிங் முயற்சிகளை மேற்கொண்டது. முதல் பாஸ் தோராயமாக 300 கிலோ மீட்டர் தொலைவிலும், 2- ஆவது பாஸ் சுமார் 245 கிலோ மீட்டர் தொலைவிலும் செயல்படுத்தப்பட்டது. இந்த 2 முயற்சிகளிலும் ஏ எஃப் ஆர் செயற்கை கோள்களின் சென்சார் வேகமாக நகரும் ஐ எஸ் எஸ்-ஐ கண்காணிக்க துல்லியமாக பணிக்கப்பட்டது. சுமார் 2.2 மீட்டர் இமேஜிங் மாதிரியுடன் மொத்தம் 15 தனித்துவமான பிரேம்களை பிடித்தது. இது தொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், 2 முயற்சிகளும் 100 சதவீத வெற்றியை பெற்றன.

சுற்றுப்பாதையில் உள்ள பொருள்களை கண்காணிக்க

அதன் கண்காணிப்பு வழிமுறைகள் மற்றும் எலக்ட்ரோ- ஆப்டிகல் இமேஜிங் துல்லியத்தை சரி பார்க்கப்பட்டன. அஜிஸ்டாவை பொருத்தவரை, இந்த நிகழ்வு ஒரு தொழில்நுட்ப சாதனையை விட அதிகமாகவும், இது இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு வழிமுறைகள் மற்றும் மின் ஒளியியல் அமைப்புகள், செயற்கைக்கோள் பொறியியல் ஆகியவற்றை சுற்றுப்பாதையில் உள்ள பொருட்களை கண்காணிக்கவும் வகைப்படுத்தலாம் என்பதற்கான சான்றாகவும் விளங்குகிறது.

மேலும் படிக்க: பொருட்காட்சியில் அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்.. ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.. திடுக் வீடியோ!!

Follow Us