AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டுப் பாடம் செய்யாததால் 2 ஆம் வகுப்பு மாணவரை 150 முறை குச்சியால் தாக்கிய ஆசிரியர்!

English Teacher Continuously Beats 2nd Standard Student | உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை வீட்டுப் பாடம் முடிக்கவில்லை என கூறி அந்த பள்ளியின் ஆங்கில ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

வீட்டுப் பாடம் செய்யாததால் 2 ஆம் வகுப்பு மாணவரை 150 முறை குச்சியால் தாக்கிய ஆசிரியர்!
காயமடைந்த மாணவர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Feb 2026 18:14 PM IST

கோண்டா, பிப்ரவரி 07 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) வீட்டுப் பாடம் முடிக்காததால் 2 ஆம் வகுப்பு மாணவரை ஆசிரியர் 150 முறை குச்சியால் அடித்து துன்புறுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர் மிக கடுமையாக தாக்கியதன் காரணமாக மாணவருக்கு கால் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டுப் பாடம் முடிக்காததால் மாணவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

உத்தர பிரதேச மாநிலம், கொண்டா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றும் பிரகர் சிங் என்ற ஆங்கில ஆசிரியர் வீட்டுப் பாடம் செய்யாததால் 2 ஆம் வகுப்பு மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த சிறுவன் வீட்டுப் பாடம் முடிக்காத ஆத்திரத்தில் அந்த ஆசிரியர் அவரை மிக கடுமையாக தாக்கியுள்ளார். அதாவது குச்சியால் சுமார் 150 முறை அந்த மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : மனப் பயிற்சி, சமநிலை மற்றும் அறிவே வெற்றிக்கான விசை: ‘பரீட்சா பே சர்ச்சா’வில் பிரதமர் மோடி

ஆசிரியர் கடுமையாக தாக்கியதன் காரணமாக அந்த மாணவர் கால் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு வீங்கிய நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை கண்டு அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாணவர் கூறிய நிலையில், அவரின் தந்தை உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர்

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்,  இந்த சம்பவம் குறித்த தகவல் காதுக்கு வந்ததும் அந்த ஆங்கில ஆசிரியரை பணியில் இருந்து நீக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து அந்த பள்ளி போலீசாரின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us