Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லை.. காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி!

Wife Killed Husband With The Help Of Lover In Rajasthan | ராஜஸ்தானில் அஞ்சலி என்ற பெண் அசிஷ் என்ற இளைஞரை மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்ட நிலையில், திருமண வாழ்க்கை திருப்தியாக இல்லை என்பதால் தனது காதலன் உதவியுடன் கணவனை கொலை செய்துள்ளார்.

திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லை.. காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி!
கொலை செய்த கும்பல் மற்றும் கொலைத்து உடந்தையாக இருந்த அஞ்சலி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Feb 2026 15:09 PM IST

கங்காநகர், பிப்ரவரி 06 : ராஜஸ்தானில் (Rajasthan) இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அது கொலை என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இந்த கொலையை உயிரிழந்த நபரின் மனைவி தனது காதலனுடன் இணைந்து செய்ததும், பிறகு அதனை சாலை விபத்து மற்றும் கொள்ளை போல் சித்தரித்து நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது. இந்த கொடூர கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

கணவனை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி

ராஜஸ்தான் மாநிலம், கங்காநகர் பகுதியை சேர்ந்தவர் அசிஷ். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அஞ்சலி என்ற பெண்ணுடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்தில் தனக்கு திருப்தி ஏற்படாத நிலையில், அஞ்சலி தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது காதலன் சஞ்சயிடம் உதவி கேட்ட நிலையில், சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இதையும் படிங்க : மேகாலயா சுரங்க வெடிவிபத்து.. பிப்.9 ஆம் தேதி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கொலை செய்துவிட்டு விபத்து போல் சித்தரித்த கும்பல்

இந்த விவகாரம் தொடர்பாக அசிஷின் மாமா அளித்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 31, 2026 அன்று காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அசிஷ் அடையாளம் தெரியாத வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அதன்படி, சாலை விபத்தாக தொடங்கிய இந்த வழக்கு, பிரேத பரிசோதனை முடிவில் அசிஷின் உடலில் இருந்த காயங்களுக்கான உண்மை என்ன என்பதை கண்டறிய முயற்சி செய்தபோது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : உச்சக்கட்ட கோபத்தில் சூரியன்…இந்தியாவின் செயற்கைகோள்-சிக்னல்கள் பாதிக்க வாய்ப்பு…இஸ்ரோ எச்சரிக்கை!

அசிஷின் உடலில் இருந்த காயங்கள் விபத்தில் ஏற்பட்டதை போல இல்லை என்பதனை பிரேத பரிசோதனை முடிவுகள் உறுதி செய்த நிலையில், அதன் பின் இருக்கும் உண்மை வெளியே வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அஞ்சலி தனது கணவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வாக்கிங் செல்லாம் என அழைத்துச் சென்றுள்ளார். அதற்கு முன்னதாக அவர் தனது காதலன் உள்ளிட்ட மூன்று பேரை தனது கணவரை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

திட்டத்தின் படி கணவரை அஞ்சலி அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர்கள் மூவரும் அசிஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் அவர் மயக்கமடைந்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவத்தை ஒரு கொள்ளை சம்பவம் போல சித்தரிக்க அஞ்சலி தனது கணவரின் ஸ்மார்ட்போன் மற்றும் நகைகளை அந்த கும்பலிடம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இவை அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.