AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பள்ளத்தில் பாய்ந்த கார்- பேருந்து.. 12 பேரை பலி கொண்ட கொடூர விபத்து.. உத்தரகாண்டில் பெரும் சோகம்!

Uttarakhand Two Road Accident 12 Died : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒ ரே இடத்தில் நிகழ்ந்து இருவேறு விபத்துகளில் 12 பே ர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

பள்ளத்தில் பாய்ந்த கார்- பேருந்து.. 12 பேரை பலி கொண்ட கொடூர விபத்து.. உத்தரகாண்டில் பெரும் சோகம்!
உத்தரகாண்டில் நிகழ்ந்து சாலை விபத்து.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 17 Nov 2026 10:23 AM IST

உத்தரகாண்ட் மாநிலம், டெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக 100 மீட்டர் ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 26 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஹரித்வாரில் இருந்து ஜோஷிமத் நோக்கி சுமார் 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தானது டெஹ்ரி மாவட்டத்தின் முனி கி ரெட்டி பகுதியில் உள்ள குலார் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம்

முனி கி ரெட்டி, ஷிவ்புரி, குலார், பியாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த போலீசார், மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறையினர், ஆம்புலன் ஊழியர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, பள்ளத்தாக்கில் மீட்பு குழுவினர் இறங்கி விபத்தில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டு மேலே அழைத்து வந்தனர். அங்கிருந்து காயமடைந்தவர்கள் அனைவரும் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்தப் பகுதியில், தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்ததாகவும், 6 பயணிகள் உயிரிழந்து இருப்பதாகவும், 20 பயணிகள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக எஸ். டி. ஆர். எஃப். குழுவின் தலைவர் கவிந்திர சஜ்வான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: புவி வெப்பமயமாதல் தீவிரமடையும் நிலையிலும் சில நகரங்கள் குளிர்ச்சியடைவது ஏன்? .. வியக்க வைக்கும் அறிவியல் ஆய்வின் பின்னணி!!

ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து

எங்கள் குழுக்கள் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. உயர் காவல்துறை அதிகாரிகளும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவம் இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. திங்கட்கிழமை இரவு ருத்ரபிரயாக் மாவட்டம், காந்தாரா அருகே பொலிரோ வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

திருமண நிகழ்வில் பங்கேற்று திரும்பியபோது சோகம்

திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டு ரான்சி கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த வாகனத்தில் 10 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் ரான்சியை சேர்ந்த குன்வர் சிங், மதன் சிங், சூரத் சிங், தாதா கீத் பஸ்தீயை சேர்ந்த பல்பீர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த இரு விபத்துகளில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 32 காயம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: ஒரே இடத்தில் புல்லட் ரயில் & சாதாரண ரயில்.. அகமதாபாத்தில் புதிய நடைமேடைகள் ரெடி.. முழு விவரம்!

Follow Us