குடும்பத்தைச் சுற்றிப் புனையப்பட்ட பொய்க் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே புத்தகம் எழுதினேன்! – சோனியா காந்தி
Sonia Gandhi: நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சோனியா காந்தி, தனது மாமியார், கணவர் ராஜீவ் காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி மற்றும் தன்னைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உண்மைக்குப் புறம்பானவை. எங்கள் குடும்பத்தின் உண்மையான வாழ்க்கைக்கும் அந்தக் கதைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நவம்பர் 16, 2026: காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூல், டெல்லியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தனது குடும்பத்தினரைப் பற்றி பல்வேறு பொய்யான கதைகள் பரப்பப்பட்டு வருவதால், உண்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தப் புத்தகத்தை எழுதியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சோனியா காந்தி, தனது மாமியார், கணவர் ராஜீவ் காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி மற்றும் தன்னைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உண்மைக்குப் புறம்பானவை. எங்கள் குடும்பத்தின் உண்மையான வாழ்க்கைக்கும் அந்தக் கதைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்களைச் சுற்றிப் பல்வேறு பொய்களும், புண்படுத்தும் வகையிலான செய்திகளும் புனையப்படுகின்றன. எனவே, எனது உணர்வுகளையும், குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகளையும் மக்களிடம் பகிர்ந்துகொள்ள இந்தப் புத்தகத்தை எழுதினேன் என்று தெரிவித்தார்.
‘Belonging’ என்ற தலைப்பின் பின்னணி
இந்தப் புத்தகத்தின் தலைப்பு குறித்து விளக்கிய அவர், வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்ற உணர்வுடன் வாழும்போது, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராக இருப்பதாகவும், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தொடர்ந்து கவனிப்பதாகவும் தோன்றும். அவர்களுடன் இணைந்து வாழவும், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவும் மேற்கொள்ளும் முயற்சியையே ‘Belonging’ என்ற தலைப்பு பிரதிபலிக்கிறது என்றார்.
மேலும் படிக்க: ஒரே இடத்தில் புல்லட் ரயில் & சாதாரண ரயில்.. அகமதாபாத்தில் புதிய நடைமேடைகள் ரெடி.. முழு விவரம்!
மேலும், திருமணத்திற்குப் பிறகு கணவரின் வீட்டிற்குச் செல்லும் பெண்கள் அங்குள்ள குடும்பச் சூழலுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பல பெண்கள் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். முற்றிலும் மாறுபட்ட கலாச்சார மற்றும் சமூகச் சூழலில் இருந்து வந்ததால், தனக்கு இந்த அனுபவம் இன்னும் சவாலானதாக இருந்திருக்கலாம். இருப்பினும், இந்தியப் பெண்களும் கணவரின் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
ஒரு வாரத்தில் 2 லட்சம் பிரதிகள் விற்பனை
கடந்த நவம்பர் 10ஆம் தேதி விற்பனைக்கு வந்த இந்தப் புத்தகம், ஒரு வாரத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அறிமுக நூல்கள் மற்றும் சுயசரிதை நூல்களில் மிக வேகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இது இடம்பிடித்துள்ளது.
வாசகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு குறித்து பேசிய சோனியா காந்தி, மக்கள் காட்டிய அன்பு தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாகக் குறிப்பிட்டார். புத்தகம் குறித்த சில விமர்சனங்கள் கடுமையாகவும், சில விமர்சனங்கள் நேர்மையானதாகவும் இருந்ததாகத் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி உடனான காதல் குறித்து பகிர்ந்த சோனியா
தனது கணவர் ராஜீவ் காந்தியுடனான காதல் வாழ்க்கை குறித்தும் சோனியா காந்தி நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்தார். கேம்பிரிட்ஜில் நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் அறிமுகமானதாகவும், அது ஒரு மாயாஜாலக் காதலாகத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸில் இருந்து விலகிய பாஜக தலைவர் அமரீந்தர் சிங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.