நாங்கள் நண்பர்கள்…. – முதல்வர் விஜய்யுடன் பேசியது குறித்து கர்நாடகா முதல்வர் விளக்கம்
CM Vijay Mekedatu Dam Talks : டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேசினார். நாங்தள் அனைவரும் நண்பர்கள் என கர்நாடகா முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
பெங்களூரு, நவம்பர் 17: டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் (CM Joseph Vijay), கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேசினார். மேகதாது அணை விவகாரம் குறித்து இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு பெரும் கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய்யுடன் பேசியது குறித்து கர்நாடகா முதல்வர் விளக்கம்
இந்த நிலையில் நாங்தள் அனைவரும் நண்பர்கள். நாங்கள் அனைவரும் இந்தியர்கள். இந்தச் சந்திப்பு குறித்து மேலும் பேச விரும்பவில்லை. மேகேதாட்டு திட்டம் மற்றும் காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதன்படி, கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி தண்ணீரை வழங்கக் கடமைப்பட்டுள்ளது என்றும், இந்த பொறுப்பை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிக்க : வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் எடுத்துச்செல்ல தடையில்லை – தமிழக அரசின் உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் தீர்ப்பு




மேகேதாட்டு திட்டம் தொடர்பாக பாஜக முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க மறுத்த அவர், அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் விவாதிக்க வேண்டிய விஷயமல்ல இது என்று குறிப்பிட்டார். இந்தத் திட்டம் மண்டியா, மைசூரு, ஹாசன் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கும், அதேபோல் தமிழ்நாட்டிற்கும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் மீண்டும் உறுதியாக தெரிவித்தார்.
கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய Belonging A Journey of Love என்ற சுயசரிதை புத்தகம் வெளியீட்டு விழா நவம்பர் 16, 2026 நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸில் இருந்து விலகிய பாஜக தலைவர் அமரீந்தர் சிங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பிரச்னையாக உருவாகியுள்ள நிலையில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்திக்கொண்டது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிக்க : 1 மணி நேரத்திற்குள் ரூ.1 கோடி கொள்ளை – சென்னை தனியார் நிறுவன வங்கிக் கணக்கை ஹேக் செய்த கொள்ளையர்கள் – பகீர் தகவல்
இதற்கிடையே திமுகவின் வழக்கறிஞர் அணி பரந்தாமன், மக்கள் வரிப்பணத்தில் தனி விமானம் மூலமாக டெல்லி சென்று வந்த தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய், அங்கு தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான காவிரி மற்றும் மேகதாது தொடர்பாக பேசாதது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.