AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எப்போ தெரியுமா?

Sabarimala Special Trains : கார்த்திகை மாத முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி, மாலை அணிந்து தங்களது 48 நாள் விரதத்தைத் தொடங்கினர். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்கு, சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். 

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எப்போ தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Nov 2026 10:11 AM IST

சென்னை, நவம்பர் 17 : கார்த்திகை மாத முதல் நாளான நவம்பர் 17, 2026 இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பூஜைகளுடன் திறக்கப்பட்டது. இதனையடுத்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் (Sabarimala Pilgrims) புனித நீராடி, மாலை அணிந்து தங்களது 48 நாள் விரதத்தைத் தொடங்கினர். அதே போல் தமிழகத்தில் பலரும் மாலை அணிந்து மண்டல விரதத்தை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்கு, சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில்

அதன்படி சென்னை எழும்பூர் – கொல்லம் ரயில், வரும், நவம்பர் 19, 2026 முதல், ஜனவரி 21, 2026 வரை வியாழன்தோறும் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம் வழியே, மறுநாள் மாலை, 4:30 மணிக்கு கொல்லத்தை அடையும். வெள்ளி அதிகாலை, 5:00 மணிக்கு சேலம், 6:05க்கு ஈரோடு வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அண்ணா அறிவாலயம் அமைந்திருப்பது பஞ்சமி நிலமா? புகார் வந்தால் நடவடிக்கை – எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் உறுதி

மறுமார்க்க ரயில், வரும், நவம்பர் 20, 2026 முதல், ஜனவரி 22, 2026 வரை, வெள்ளிதோறும் மாலை, 6:45க்கு கிளம்பி, அடுத்தநாள் மதியம், 12:30க்கு சென்னை எழும்பூரை அடையும். சனி அதிகாலை, 5:20க்கு ஈரோடு, 6:27க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சார்லபள்ளி – கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெலங்கானா மாநிலம் சார்லபள்ளி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ரயில் எண் 07199 என்ற சிறப்பு ரயில்கள் டிசம்பர் 30, 2026 முதல் ஜனவரி 15, 2027 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இயக்கப்படவுள்ளது. .சார்லபள்ளி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.40 மணிக்குப் புறப்பட்டு, அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் வழியாகப் பயணித்து கொல்லத்தைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 07200 கொல்லம் – சார்லபள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஜனவரி 1, 2027 முதல் ஜனவரி 15, 2027 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தமிழகத்தின் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், மற்றும் போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதையும் படிக்க : ஆதவ் வாழ்வில் வீசிய விவாகரத்து புயல்.. Divorce- க்கு இதுதான் காரணமா? பெரியம்மா திலகவதி கூறியதை பாருங்க!

சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், “இந்த மண்டல காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தருக்கும் பாதுகாப்பான, அமைதியான மற்றும் ஆன்மிக நிறைவு தரும் யாத்திரை அமைய வேண்டும்.
சுவாமியே சரணம் ஐயப்பா என தெரிவித்துள்ளார்.

Follow Us