அத்துமீறினா அதிரடி தான்.. லத்தியை கையில் எடுக்கும் சிறை காவலர்கள்.. சிறைத்துறை அதிரடி உத்தரவு!
Prison Guards Carry Batons : தமிழக சிறைகளில் பணிபுரியும் சிறை காவலர்கள் லத்தியை கையில் வைத்துக் கொள்ளலாம் என்று சிறைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சிறை காவலர்கள் லத்தியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது .
தமிழகத்தில் அடுத்தடுத்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி சென்ற சம்பவத்தை தொடர்ந்து சிறை காவலர்கள் லத்தி கொண்டு செல்லலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புழல் மற்றும் தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக அனைத்து சிறைகளிலும் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு தகவல்கள் சிறை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு சென்றது. இதில், சிறை வளாகத்தில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும், சிறைக்குள் மிகவும் குறைந்த அளவில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. அத்துடன், சில சிறைகளில் செய்திகள் அத்துமீறி செயல்படுவதும் கவனத்துக்கு வந்தது.
சிறை காவலர்கள் லத்தி பயன்படுத்த அனுமதி
இதன் காரணமாக சில சிறைகளில் கைதிகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக சிறைக் காவலர்கள், கைதிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறை காவலர்கள் கையில் லத்தி கொண்டு செல்லலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறை துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சிறைகளுக்குள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்கள் கையில் லத்தி வைத்திருந்தனர். ஆனால், அப்போது நிகழ்ந்த சில சம்பவங்களாலும், உரிமை மீறப்படுவதாக எழுந்த புகார்களாலும் சிறை காவலர்கள் கையில் இருந்து லத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: மது கொடுத்து பாலியல் அத்துமீறல்.. ஜெகஜால கில்லாடியான பிக்பாஸ் முத்துக்குமரன்.. இளம்பெண் அடுக்கிய குற்றச்சாட்டு!
சுமார் 10 ஆண்டுகளாக லத்தி பயன்படுத்த அனுமதியில்லை
அது முதல் தற்போது வரை சிறை காவலர்கள் லத்தியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது, அடுத்தடுத்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி செல்லும் சம்பவம் காரணமாக சிறை காவலர்கள் லத்தியை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும், தற்காலிகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில், சிறைக் காவலர்கள் மீது புகார்களோ, மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளோ வராமல் இருந்தால்தான் சிறை காவலர்களுக்கு நிரந்தரமாக லத்தியை வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து சிறை கைதிகள் தப்பிய விவகாரம்
தமிழகத்தில், சென்னை புழல் சிறை, தேனி மாவட்ட கிளை சிறை மற்றும் புழல், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு கைதிகள் அடுத்தடுத்து தப்பி சென்றனர். இதனை தடுக்கும் வகையிலும், சிறைக் காவலர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் லத்தி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எதிர்காலத்தில் கைதிகள் தப்பி செல்வது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஆதவ் வாழ்வில் வீசிய விவாகரத்து புயல்.. Divorce- க்கு இதுதான் காரணமா? பெரியம்மா திலகவதி கூறியதை பாருங்க!