AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘முதல்வரை சாட்சியாக வைத்தேன்… ‘ – முதல்வருக்கு அரோகரா என பாடிய சர்ச்சை – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

Pushpavanam Kuppusamy Song Controversy : திருச்செந்தூரில் கடந்த நவம்பர் 15, 2026 அன்று சூரசம்ஹார விழாவில் முதலமைச்சருக்கு ‘அரோகரா’என்று பாடகர்கள் வேல்முருகன் மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் பாடிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘முதல்வரை சாட்சியாக வைத்தேன்… ‘ – முதல்வருக்கு அரோகரா என பாடிய சர்ச்சை – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
புஷ்பவனம் குப்புசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Nov 2026 08:38 AM IST

சென்னை, நவம்பர், 17 : திருச்செந்தூரில் கடந்த நவம்பர் 15, 2026 அன்று சூரசம்ஹார விழாவில் முதலமைச்சருக்கு ‘அரோகரா’என்று பாடகர்கள் வேல்முருகன் மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் பாடிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக (DMK), பாஜக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் இது குறித்து இந்து முன்னணி நிர்வாகி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி விளக்கமளித்துள்ளார்.

முதல்வருக்கு அரோகரா என பாடிய சர்ச்சைக்கு புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

இது தொடர்பாக புஷ்பவனம் குப்புசாமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “மக்கள் என்னைத் திட்டுவதற்கு உரிமை உண்டு. நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை; முதல்வரை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டுப் பாடவில்லை. முருகப்பெருமானின் செயலுக்கு முதல்வரை சாட்சியாக வைத்தே பாடினேன். முருகப்பெருமானின் பேரருளுக்கு நிகர் யாரும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: உருவானது அக்வான் புயல்…. இந்த 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு முழுவதும் கந்தசஷ்டி விழாவின் மிக முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நவம்பர் 15, 2026 தமிழக கோவில்களில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவில் பாடகர் வேல்முருகன், தமிழக முதல்வருக்கு அரோகரா எனவும் இந்து அறநிலையதலைவருக்கு அரோகரா என்றும் பாடல் பாடினார். அதனைத் தொடர்ந்து பாடிய தமிழ்நாடு இயல், இசை நாடகமன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி, முதல்வர் குறித்து பாடியதாக குற்றச்சாட்டு எஎழுந்துள்ளது.

குறிப்பாக, கடவுள் வழிபாட்டின் போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெயரை குறிப்பிட்டு கடவுளுக்கு இணையாக ‘அரோகரா’ கோஷம் போடுவதா? என பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்டோரும் வேல்முருகனின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு அரோகரா சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க : மது கொடுத்து பாலியல் அத்துமீறல்.. ஜெகஜால கில்லாடியான பிக்பாஸ் முத்துக்குமரன்.. இளம்பெண் அடுக்கிய குற்றச்சாட்டு!

திமுக கண்டனம்

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதலமைச்சருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செதூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வழக்கமாக சூரசம்ஹார நிகழ்வில் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற முழக்கங்களே எழுப்பப்படும் நிலையில், இந்த ஆண்டு முதலமைச்சருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்டது புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் செயல். இது ஆணவத்தின் உச்சம் என தெரிவித்தார்.

Follow Us