IND vs NZ: இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் 2026.. அதிகாலை 3 மணிக்கு நடைபெறுகிறதா?
India vs New Zealand Test Series 2026: இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2026 டெஸ்ட் தொடர் நவம்பர் 19 அன்று தொடங்குகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி, சுப்மன் கில் தலைமையில் டெஸ்ட் தொடரில் மோதுகிறது. டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி அதிகாலை 3:30 மணிக்கு போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்திய அணி தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் (IND vs NZ) உள்ளது. இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தை ஒரு டி20 தொடருடன் தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி (Indian Cricket Team) 3-2 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. எனவே, இந்த டெஸ்ட் தொடர் எப்போது தொடங்கும் இந்தத் தொடருக்கான இரு அணிகளின் வீரர்கள் விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ரோஹித், கோலியின் அடுத்த ஆட்டங்கள் எப்போது..? பார்முக்கு திரும்புவார்களா..?
இந்தியா – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற 2026 நவம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஸ்யேடியத்தில் நடைபெறும். அதேநேரத்தில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 27ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் ஸ்யேடியத்தில் தொடங்கும். இத்தொடரில் சுப்மன் கில் இந்திய அணிக்குத் தலைமை தாங்குவார். அதே நேரத்தில் டாம் லாதம் நியூசிலாந்து அணிக்குத் தலைமை தாங்குவார். கில் இந்தியாவின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் இருக்கிறார், ஆனால் டெஸ்ட் தொடருக்கான முறையான தயாரிப்பை உறுதி செய்வதற்காக, நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தவில்லை. அந்த இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்கினார்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் அட்டவணை
- முதல் டெஸ்ட் – 2026 நவம்பர் 19, வெலிங்டன், பேசின் ரிசர்வ் ஸ்டேடியம்
- 2வது டெஸ்ட் – 2026 நவம்பர் 27, ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச்
இந்தியாவில் போட்டிகள் எத்தனை மணிக்குத் தொடங்கும்?
இந்தியா – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டிகளும் இந்திய நேரப்படி அதிகாலை 3:30 மணிக்குத் தொடங்கும். 5 நாட்களும் ஆட்டம் அதிகாலை 3:30 மணிக்குத் தொடங்கும். போட்டியை நேரலையில் காண, நீங்கள் நிச்சயமாக உங்கள் தூக்கத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி, குர்னூர் ப்ரார், முகமது சிராஜ்.
ALSO READ: பவுலிங்கில் இந்திய அணி பக்கா மாஸ்.. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி
டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டெல், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர், வில் யங்.