Team India: நியூசிலாந்து தொடரில் சொதப்பல்.. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் இடம் கேள்வி!
Rohit Sharma's ODI Future: இந்திய ஒருநாள் அணியில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் 2027 உலகக் கோப்பை இடம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. நியூசிலாந்து ஒருநாள் தொடரில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாகச் செயல்பட்டது விவாதத்தை கிளப்பியுள்ளது. 39 வயதான ரோஹித் சர்மா, வரவிருக்கும் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு, தனது இடத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்திய ஒருநாள் அணியில் (Indian Cricket Team) முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் இடம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. 39 வயதான ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவாரா? இந்தக் கேள்வி மீண்டும் எழ தொடங்கியுள்ளது. முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா (Rohit Sharma) பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால்தான் இந்திய அணியில் அவரது இடம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா 4 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுமட்டுமின்றி, அந்தத் தொடரில் ரோஹித் சர்மா 2 போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். அந்தத் தொடரில் அவரது பேட்டிங் சராசரி வெறும் 7.50 ஆக இருந்தது, இது ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக அவரது மிக மோசமான செயல்திறனாகும்.




ALSO READ: 13 ஆண்டுகளுக்குப் பிறகு.. இரட்டை இலக்க ரன்கள் எடுக்க முடியாமல் திணறும் கோலி!
நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மா செயல்திறன் எப்படி..?
FINAL GOODBYE IN NEWZELAND SOIL.
Rohit Sharma Bids Farewell to Fans at Bay Oval In NZ.
#RohitSharma #Rohit𓃵 https://t.co/RVIRn2SqQX
— Bharat Pulse (@TheBharatPulse_) November 16, 2026
நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் டக் அவுட் ஆனார். பின்னர், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 23 ரன்கள் எடுத்தார். மூன்றாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நான்காவது ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். தொடரின் இறுதிப் போட்டியில் அவரால் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தனது கடைசி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ரோஹித் சர்மா பேட்டிங்கில் படுதோல்வி அடைந்தார். இருப்பினும், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 209 ரன்களை வெற்றிகரமாக தற்காத்தது.
ALSO READ: ரோஹித், கோலியின் அடுத்த ஆட்டங்கள் எப்போது..? பார்முக்கு திரும்புவார்களா..?
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா ரோஹித்..?
2027 ஒருநாள் உலகக் கோப்பையானது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது. உலகக் கோப்பையின் போது ரோஹித்துக்கு 40 வயதாகியிருக்கும். வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான தொடர்கள் உட்பட ரோஹித் சர்மா எப்படிச் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2027 உலகக் கோப்பைக்கு முன்பு, இந்தியா ஆசியக் கோப்பை, இலங்கைத் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும். உலகக் கோப்பைக்குத் தகுதிபெற, இந்தத் தொடர்களில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.