ஓடிடியில் வெளியாகி உள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Jailer 2 Movie OTT Review Here | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கும் படம் ஜெயிலர் 2. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம் என்ற விகிதத்திலாவது படம் திரையரங்குகளில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. முதல் பாகம் மிகுந்த ட்விஸ்டுடன் முடிவடைந்த காரணத்தால் இந்த இரண்டாம் பாகத்தினை ரசிகர்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்த்து காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். முதல் பாகத்தை போல இந்தப் படத்திலும் ஆக்ஷன் மற்றும் மாஸ் என ரஜினிகாந்த் நடந்தேலே திரையரங்குகளில் கைத்தட்டு விசில் பறக்கும் விதத்திலேயே எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு முதல் பாகத்தைப் போலவே மாஸாக இசையமைத்து இருந்தார் அனிருத் ரவிச்சந்தர் என்பது குறிப்பிடித்தக்கது.
முதல் பாகத்தின் தொடர்ச்சிதானா ஜெயிலர் 2 படம்?
ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் தனது மகன் குற்றம் செய்தவன் என்று தெரிந்ததும் அவனை கொல்ல நினைக்கிறார். ஆனால் கொலை செய்தாரா இல்லையா என்பதே இரண்டாம் பாகத்திற்கான லீடாக அமைந்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் இருந்தே ரஜினிகாந்தி மகன் குறித்து எந்தவிதமான காட்சிகளும் இடைவெளி வரையுமே இருக்காது. வர்மனை கொலை செய்தது யார் என்று அவனுக்கும் மேலே இருக்கும் வில்லன்கள் ஒரு பக்கம் தேடி வருகின்றனர்.




அதே நேரத்தில் அந்த வர்மனை சுற்றி நடைபெறும் சிலைக் கடத்தல்களை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு அதனை அழிக்கும் பணியில் ரஜினிகாந்த் உள்ளார். ஒரு பக்க குடும்பத்தையும் மற்றொரு பக்கம் இந்த விசயத்தையும் செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் வர்மனைவிட பெரிய வில்லனாக வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
Also Read… பிக்பாஸில் கேப்டனான தன்யா… திட்டமிட்டு கடுப்பேற்றும் ஜேசன் – வைரலாகும் வீடியோ
நேரடியாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரஜினிகாந்த் மோதிக்கொள்ளும் போது தனது மகனையே கொலை செய்தவர் என்பதை தெரிந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அந்த விசயத்தை ஜெயிலரின் குடும்பத்தினரம் வெளிபடுத்த இதனால் குடும்பத்தினர் ரஜினிகாந்த் மீது கோபமடைகின்றனர். இறுதியில் குடும்பத்தினர் ரஜினிகாந்தை புரிந்துகொண்டாரா? எஸ்.ஜே.சூர்யாவை தோற்கடித்தாரா என்பதே பட்த்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… அஜித்திற்கு வில்லனாகும் சிவராஜ்குமார்? வைரலாகும் டேர்டெவில் படத்தின் அப்டேட்