இந்தக் கனவுக்கு வானமே எல்லை அல்ல… வெளியானது துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓகா தாரா படத்தின் ட்ரெய்லர்!
Aakasamlo Oka Tara Movie Trailer | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஆகாசம்லோ ஓக தாரா. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரது நடிப்பில் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. துல்கர் சல்மான் பொருத்தவரை அவரது தாய் மொழியான மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகும் படங்களின் மீது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. அது என்ன என்றால் துல்கர் தேர்வு செய்து நடிக்கும் படம் நிச்சயமாக நன்றாக இருக்கும். அவர் ஏதேனு படத்தில் நடிக்க மறுத்துவிட்டால் அந்தப் படம் நிச்சயமாக நன்றாக இருக்காது என்பதில் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
முந்தைய காலங்களில் அவை உண்மை என்பது போலவே பலப் படங்களின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் வெளியாக உள்ள படம் ஆகாசம்லோ ஓக தாரா. இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




வெளியானது ஆகாசம்லோ ஓகா தாரா படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது கிராமத்தில் சரியான வசதி கூட இல்லாத இடத்தில் இருந்து ஆஸ்ட்ரோனெட் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண்ணிற்கு அவரது கனவை நினைவாக்க போராடும் ஒரு ஆண் தேவதையாக இருக்கிறார் துல்கர் சல்மான். இது ட்ரெய்லரைப் பார்க்கும் போது புரிகிறது. படம் எப்படி இருக்கும் என்பது படத்தைப் பார்த்த பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாசம்லோ ஓக தாரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sky is not the limit for this Dream⭐️🚀
#AOTTrailer Out Now in Telugu.▶️https://t.co/MvQG4TMdYH
#AakasamLoOkaTara / #AOT in Cinemas from November 20th
#AOTonNOV20th
@dulQuer @pavansadineni @shrutihaasan @satveeravalli @iRuhaniSharma @GeethaArts @SwapnaCinema @DQsWayfarerFilm @Lightboxoffl @grajug @sunnygunnam @ramya_gunnam @sujithsarang #VasantJurru @shreelyricist @lipsikabhashyam #ArunAlat @auanand #HarithaBalakrishnan @balajesaar @TSeries @tseriessouth— Geetha Arts (@GeethaArts) November 16, 2026
Also Read… இதெல்லாம் ஒரு Role- ஆ? ஓ.எம் படத்தில் நடித்தது குறித்து மம்முட்டி பகிர்ந்த சம்பவம்!