AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே நேரத்தில் வெளியாகும் ஓ.எம் மற்றும் ஆகாசம்லோ ஓகா தாரா – துல்கர் சல்மான் கொடுத்த ரியாக்‌ஷன்!

Dulquer Salmaan talks about clash with OM movie | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் வெளியாகும் ஓ.எம் மற்றும் ஆகாசம்லோ ஓகா தாரா – துல்கர் சல்மான் கொடுத்த ரியாக்‌ஷன்!
துல்கர் சல்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Nov 2026 12:02 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள நடிகர் மம்முட்டியின் மகனாக திரைத்துறையில் எண்ட்ரி கொடுத்து இருந்தாலும் தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் கதை தேர்வின் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றார். இவர் மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தாலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் வரிசையாக படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் எந்த மொழியில் படங்களில் நடித்தாலும் அதனை ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை என்றே சொல்லலாம். அதன்படி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக ஐ அம் கேம் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடித்து உள்ள படம் ஆகாசம்லோ ஓக தாரா. இந்தப் படம் போஸ்டர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்தது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் பவன் சாடினேனி இயக்கி உள்ளார். இதில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

ஒரே நேரத்தில் வெளியாகும் ஓ.எம் மற்றும் ஆகாசம்லோ ஓகா தாரா:

மேலும் நடிகர் துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓக தாரா படமும் நடிகர் தனுஷின் ஓ.எம் படமும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அது குறித்து துல்கர் சல்மான் வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி நடிகர் துல்கர் சல்மான் பேசியதாவது, நவம்பர் 20-ஆம் தேதியன்று, எங்கள் படத்திற்கும் ஒரு வாய்ப்பளியுங்கள். அதே நாளில் ஓ.எம் எனும் மற்றொரு பிரம்மாண்டமான திரைப்படமும் வெளியாகிறது. இருப்பினும், இவை இரண்டும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை மற்றும் வெவ்வேறு மொழிகளில் உருவானவை. அந்தப் படத்தையும் பாருங்கள், எங்கள் படத்தையும் பாருங்கள்.

Also Read… நடிகர் தனுஷின் ஓம் படத்தின் சென்சார் அப்டேட் இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Sai Pallavi: எனது ஆல் டைம் ஃபேவரட் சாப்பாடு அதுதான் – சாய் பல்லவி சொன்ன விஷயம்!

Follow Us