AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இது மலையாளத் திரைப்படத்துறைக்கு நாங்கள் சமர்ப்பிக்கும் ஒரு சிறிய காதல் கடிதம்… நடிகர் சூர்யாவின் எமோஷ்னல் பதிவு

Actor Suriya posted an X post | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சீன் படம் குறித்து மலையாள சினிமா குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

இது மலையாளத் திரைப்படத்துறைக்கு நாங்கள் சமர்ப்பிக்கும் ஒரு சிறிய காதல் கடிதம்… நடிகர் சூர்யாவின் எமோஷ்னல் பதிவு
சீன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Nov 2026 12:23 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இறுதியாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் சீன். முன்னதாக வெளியான படங்களைப் போல இந்தப் படமும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது.

இதனை சூர்யா ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூய்ராவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான சீன் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் டொவினோ தாமஸ் குறித்தும் மலையாள திரையுலகினர் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மலையாளத் சினிமாவிற்கு நாங்கள் கொடுக்கும் ஒரு சிறிய காதல் கடிதம்:

அதன்படி சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, அன்புள்ள டொவினோ, எங்கள் விக்டர் கதாபாத்திரமாக நீங்கள் நடித்ததற்கு, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிகுந்த அன்போடும் தாராள மனப்பான்மையோடும் இந்தத் திட்டத்தில் இணைந்த உங்கள் செயலை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மேலும், மலையாளத் திரைப்படத் துறையைச் சேர்ந்த எனது அற்புதமான சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து பணியாற்றியதற்கு மிக்க நன்றி. இது மலையாளத் திரையுலகிற்கு நாங்கள் சமர்ப்பிக்கும் ஒரு சிறிய காதல் கடிதம் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கும்பளங்கி நைட்ஸ் பட இயக்குநரின் இயக்கத்தில் நஸ்லென்.. நிறைவடைந்தது படத்தின் ஷூட்டிங்!

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… உண்மையிலேயே அபாரம்… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டி பேசிய கௌதம் ராம் கார்த்திக்!

Follow Us