AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சியான் விக்ரமின் பவர்ஹவுஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Powerhouse Movie Release Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பவர்ஹவுஸ். இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சியான் விக்ரமின் பவர்ஹவுஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
பவர்ஹவுஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Nov 2026 13:07 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் (Actor Vikram). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சினிமாவைப் பொருத்தவரை ஒரு நடிகருக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பது போல ஹேட்டர்ஸ் கூட்டமும் இருந்துகொண்டு தான் இருக்கின்றது. ஆனால் தன்னுடைய ரசிகர்கள் மட்டும் அல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு நடிகர் விக்ரம் என்றே கூறலாம். இன்னும் பெருமையாக சொல்லவேண்டும் என்றால் ஹேட்டர்ஸே இல்லாத நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் பிசியாக உருவாகி வரும் நிலையில் தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் பவர் ஹவுஸ்.

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். மேலும் இவர்களின் கூட்டணி இரு முகன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சியான் விக்ரமின் பவர்ஹவுஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, பவர்ஹவுஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று தெரிகிறது. இந்தப் படம் இலங்கை பின்னணியைக் கொண்டிருக்கலாம் என்றும், இதன் கதை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைப் போன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. படக்குழுவினர் ஏப்ரல் 29 அல்லது 30-ஆம் தேதிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மே 1-ஆம் தேதியை (உழைப்பாளர் தினம்) இலக்காகக் கொண்டு இந்த வெளியீட்டுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்பவே படப்பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read… இறுதிக்கட்டத்தில் மெண்டல் மனதில் படத்தின் ஷூட்டிங்… ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜூனியர் பிக் பாஸை மாற்ற நினைத்த தன்யா.. அன்சருக்கு ஆதரவாக எழுந்த ஜேசன் – எமோஷனலான ப்ரோமோ!

Follow Us