AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இறுதிக்கட்டத்தில் மெண்டல் மனதில் படத்தின் ஷூட்டிங்… ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு

Mental Manadhil Movie Shooting Update | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மெண்டல் மனதில். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான தகவலை ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

இறுதிக்கட்டத்தில் மெண்டல் மனதில் படத்தின் ஷூட்டிங்… ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு
மெண்டல் மனதில்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Nov 2026 15:56 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அவ்வபோது படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக பல சாதனைகளைப் படைத்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் ஹிட் பாடல்கள் வெளியாகி வருகின்றது. இவர் இசையமைப்பாளராக பிசியாக வலம் வந்தாலும் தொடர்ந்து தமிழ் மொழியில் நாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். வருடத்திற்கு ஒரு படமாவது நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் திரையரங்குகளில் படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இறுதியாக ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் இம்மார்டல் படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் மெண்டல் மனதில். இந்தப் படத்தை இயக்குநர் செல்வராகவன் எழுதி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டத்தில் மெண்டல் மனதில் படத்தின் ஷூட்டிங்:

இயக்குநர் செல்வராகவன் ஒரே நேரத்தில் 7 ஜி ரெயின்போ காலனி பார்ட் 2 மற்றும் மெண்டல் மனதில் என இரண்டு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமீபத்தில் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் மெண்டல் மனதில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மாஸ்டர் செல்வராகவனுடன் தொடங்கியது என்று புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சேவ் தி டேட்.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… மலையாள சினிமாவில் ஃபேமிலி காமெடி பாணியில் வெளியான இந்த அவராச்சன் & சன்ஸ் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!

Follow Us