தேதி குறிச்சாச்சு… நாளை வெளியாகிறது தனுஷின் ஓம் படத்தின் ட்ரெய்லர் – வெளியானது அப்டேட்!
OM Movie Trailer Will Be Released Tomorrow | நடிகர் தனுஷ் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது ஓம் சாப்டர் ஒன். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தங்களது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம் சாப்டர் ஒன். இந்தப் படத்தினை தேசிய விருது வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா, இந்திரன்ஸ் மற்றும் ரேணு தேசாய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.




நாளை வெளியாகிறது தனுஷின் ஓம் படத்தின் ட்ரெய்லர்:
மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஓம் சாப்டர் 1 படம் வருகின்ற நவம்பர் மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாகி இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஓம் சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் நாளை 13-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… வாத்தா இல்ல கோழியா? ஜூனியர் பிக் பாஸ் முனியம்மாளால் தடைபட்டு நிற்கும் டாஸ்க்!
ஓம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Not just another frame. A whole new game – get ready for the #OM Trailer from tomorrow!
The excitement in theatres is just 8️⃣ days away 🔥
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 12, 2026
Also Read… உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கும் வீரியமான படைப்பு… சீன் படத்தைப் பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி!