நாளை வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்?
Rainfall Alert: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 12, 2026: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் வரும் நவம்பர் 13 முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும் படிக்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, ரெயின்கோட், ஸ்வெட்டர் – டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு
எந்தெந்த மாவட்டங்களில் மழை?
இன்று (நவம்பர் 12): தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 13, 14: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் படிக்க: “நிர்வாக குளறுபடியில் சென்னையில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்”.. தவெக அரசு மீது பாய்ந்த இபிஎஸ்!!
நவம்பர் 15, 16: திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 17, 18: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 12), நாளை (நவம்பர் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.