AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளியிருப்பேன்.. பொங்கியெழுந்த ஜெயக்குமார்!

Jayakumar Condemns Kallakurichi MLA : கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது, நான் கலெக்டராக இருந்தால் என்கவுன்டர் செய்திருப்பேன் என்றார்.

ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளியிருப்பேன்.. பொங்கியெழுந்த ஜெயக்குமார்!
ஜெயக்குமார்- அருள் விக்னேஷ் எம்எல்ஏ.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Nov 2026 14:44 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு வாட்ஸ்ஆப் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அந்த தொகுதியின் தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவான அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் தமிழகத்தில் பொதுமக்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. நான் மாவட்ட ஆட்சியராக இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ வை என்கவுண்டர் செய்திருப்பேன். துப்பாக்கியால் சுட்டு தள்ளி இருப்பேன்.

துப்பாக்கியால் சுட்டு தள்ள வேண்டும்

வீடு தேடி வந்து பிரச்சனை செய்தால் அவர்களை என்ன செய்வது. வாருங்கள் என்று சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவா முடியும். அடித்து, உதைத்து, சுட்டுத் தள்ளி விட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு எவ்வளவு மனவேதனை இருந்திருக்கும். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, சாதாரண மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத உள்ளதாக ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட அருள் விக்னேஷ் என்பவர் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி.. தவெக எம்.எல்.ஏ மீது சிபிசிஐடி விசாரணை கோரி திமுக புகார்!

ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்

இவர், கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப் மூலமாக ஆபாச மெசெஜ்கள் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சியரின் வாட்ஸ் ஆப்புக்கு நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களை நேரில் சந்திக்க என்பது போன்று ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல்வாதிகள் மத்தியிலும், அரசு ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் புகார்

இதனை கண்டித்து திமுக சார்பில் தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலிடம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அதிமுக சார்பிலும் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை முதல்வர் விஜய் கடுமையாக கண்டித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: “நிர்வாக குளறுபடியில் சென்னையில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்”.. தவெக அரசு மீது பாய்ந்த இபிஎஸ்!!

Follow Us