அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, ரெயின்கோட், ஸ்வெட்டர் – டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு
Tamil Nadu School Student Welfare : தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ், ஸ்வெட்டர், ரெயின் கோட் ஆகியவற்றை வழங்குவதற்கு வழங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதி மாவட்டங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஸ்வெட்டர், ரெயின்கோட் வழங்கப்படவுள்ளது.
சென்னை, நவம்பர் 12 : தமிழ்நாட்டில் வருகிற 2027 – 28 ஆம் கல்வியாணில் அரசு பள்ளி மாணவர்களுக்கு (Government School Students) சீருடையுடன் இலவசமாக ஷூ, சாக்ஸ், ரெயின்கோட், ஸ்வெட்டர் ஆகியவற்றை வழங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஷூ, சாக்ஸ், ரெயின்கோட் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்ய ஒரே நாளில் 4 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதற்காக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூ. 52.05 கோடி மதிப்பிலான டெண்கர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்குவதற்காக ரூ.37.24 கோடி மதிப்பில் முதல் டெண்டரும், சாக்ஸ் வழங்குவதற்காக ரூ. 9.7 கோடி மதிப்பில் இரண்டாவது டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : “முழு ஆவணங்களுடன் களமிறங்கிய முதல்வர் விஜய்!”.. சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து 3வது நாளாக தொடரும் உயர் மட்ட ஆலோசனை!!




மலைப்பகுதி மாணவர்களுக்கு ரெயின்கோட், ஸ்வெட்டர்
கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மழைக்காலங்களிலும், குளிர்க்காலங்களிலும் சிரமமின்றி பள்ளிகளுக்கு சென்றுவருவதற்கு ரெயின்கோட் மற்றும் ஸ்வெட்டர் வழங்கப்படவுள்ளன.
இதற்காக 28, 30, 32 மற்றும் 34 இன்ச் அளவுகளில் மொத்தம் 91,771 ரெயின்கோட்கள் கொள்முத செய்வதற்கு ரூ. 3.32 கோடி மதிப்பில் மூன்றாவது டெண்டரும், கம்பளி ஸ்வெட்டர் கொள்முதல் செய்வதற்கு ரூ. 2.42 கோடி மதிப்பில் நான்காவது டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 2027 – 28 கல்வியாண்டில் உரிய காலகட்டத்துக்குள் மாணவர்களுக்கு பொருள்களை வழங்குவதற்காக முன்கூட்டியே டெண்டர்கள் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நவீன வசதிகளுடன் இலவச சைக்கிள்
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நாம் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் இடையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் போல அல்லாமல், அதில் நவீன சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : 3 மாதங்களுக்கு போலீஸ் எடுத்த நடவடிக்கை… – முதல்வர் விஜய்க்கு நடிகை ஷர்மிலி நன்றி!
அதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள சைக்கிளில் தண்ணீர் பாட்டில்கள் வைக்கும் இடம், பிரேக்கிங் சிஸ்டம், சைக்கிள்கள் எடை குறைவாகவும் வலுவாகவும் இருக்கும் படியும், சைக்கிள் முன்புறமும், பின்புறமும் ஒளிரும் ஸ்டிக்கர்களும் பொறுத்தப்பட்டிருக்கும். மேலும் சைக்கிளில் ஹெல்மெட் வைக்கும் இடம், தண்ணீர் பாட்டில் வைக்கும் இடமும் இடம் பெறும். இதற்காக தற்போது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து விரைவில் சைக்கிள்கள் தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.