3 மாதங்களுக்கு போலீஸ் எடுத்த நடவடிக்கை… – முதல்வர் விஜய்க்கு நடிகை ஷர்மிலி நன்றி!
Actress Sharmili Property Grabbing Case : கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு நடிகை ஷர்மிளி அளித்த புகார் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்ககாக முதல்வர் விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராமநாதபுரம், நவம்பர் 12 : நடிகை ஷர்மிலி தனது கணவருக்கு சொந்தமான பூர்வீக சொத்துக்களை அபகரித்தவர்களை கைது செய்ய கோரி கோரிக்கை விடுத்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்காக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தனது கணவருக்கு சொந்தமான பூர்வீக இடம் இருப்பதாகவும், அதனை சிலர் போலி பட்டா மூலம் பெயர் மாற்றி அபகரித்துள்ளதாகவும் கடந்த 3 மாவட்டங்களுக்கு முன் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார்.
3 மாதங்களுக்குப் பின் போலீஸ் வழக்குப் பதிவு
இந்த நிலையில் 3 மாவட்டங்களாக அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இவரது கணவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பூர்வீக சொத்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், கோட்டை வாசல் விநாயகர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளதாகவும் அந்த இடத்தில் 3 கடைகள் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு போலியான ஆவணங்களை பயன்படுத்தி ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஷர்மிலி கணவருக்கு சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு மார்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தவெக ஆட்சியில் மீண்டும் சிறுமி கடத்தல் முயற்சி.. காவல்துறைக்கு விடப்பட்ட சவால்.. நயினார் நாகேந்திரன்!




இது தொடர்பாக காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த இடத்தில் புதிதாக உணவகம் ஒன்றும் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஷர்மிலி தனது கணவர் பெயரில் உள்ள இடத்தை மீட்டுத்தர வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு அவரது புகார் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்ககாக முதல்வர் விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆணையைப் பெறுவதற்காக நவம்பர் 12, 2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த நடிகை ஷர்மிலி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
‘முதல்வர் விஜய்க்கு நன்றி’
அப்போது, தங்களது புகாரின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில், வழக்குப்பதிவு செய்ததோடு விசாரணையை நிறுத்திவிடாமல், தங்களது பூர்வீக சொத்தை அபகரித்த நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிக்க : “சர்ச்சைகளில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏக்கள்!”.. தனியாக அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய்!!
மேலும் இந்த விவகாரத்தில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் உரிய விசாரணை நடத்தி, மோசடியில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்து, தங்களுக்குச் சொந்தமான பூர்வீக சொத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய்க்கு மீண்டும் கோரிக்கை விடுத்தார்.