AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

63 ஆண்டுகளாக அசைவம் தொடாத அதிசய கிராமம்… எங்கே இருக்கு தெரியுமா?

Tamil Nadu Village: புதுக்கோட்டை மாவட்டம் வாடிமனைப்பட்டி கிராம மக்கள் கடந்த 63 ஆண்டுகளாக அசைவ உணவைத் தவிர்த்து, மதுப்பழக்கமின்றி முழுமையான சைவ வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகின்றனர். அகிம்சைக் கொள்கையால் இங்கு யாரும் ஆடு, கோழிகளை வளர்ப்பதில்லை. கண்மாயில் மீன் பிடிக்காமலும், பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை விவசாயம் செய்தும் இயற்கையைப் பாதுகாக்கின்றனர்.

63 ஆண்டுகளாக அசைவம் தொடாத அதிசய கிராமம்… எங்கே இருக்கு தெரியுமா?
வாடிமனைப்பட்டிImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 Nov 2026 13:30 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாடிமனைப்பட்டி கிராம மக்கள் கடந்த 63 ஆண்டுகளாக அசைவ உணவை முற்றிலும் தவிர்த்து சைவ உணவு முறையை மட்டுமே (Tamil Nadu Village) பின்பற்றி வருகின்றனர். தீபாவளி போன்ற திருவிழா நாள்களிலும், வெளியூர் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும்போதும் கூட இவர்கள் அசைவம் உண்பதில்லை. வெளியூர்களில் இருந்து இக்கிராமத்திற்குத் திருமணமாகி வரும் பெண்களும் இந்தக் கட்டுப்பாட்டை மனமுவந்து ஏற்று சைவ முறைக்கு மாறிவிடுகின்றனர். உயிர்க் கொலையைத் தவிர்க்கும் நோக்கில் இக்கிராமத்தில் யாரும் ஆடு மற்றும் கோழிகளை வளர்ப்பதில்லை. பசு மாடுகளை மட்டுமே வளர்க்கின்றனர். மேலும், ஊர்க் கண்மாயில் உள்ள மீன்களைப் பிடிக்காமலும், விளைநிலங்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமலும் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் மதுப்பழக்கம் இல்லை என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

Also Read: டிவி பார்த்துகிட்டே சாப்பிடுறீங்களா? ஆயுர்வேதம் சொல்ற ஷாக் தகவல்!

அசைவத்தை அறவே தவிர்த்த கிராமம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாடிமனைப்பட்டி கிராமம் பல ஆண்டுகளாக ஒரு தனித்துவமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வருகிறது. நவீன காலத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் சூழலில், இக்கிராம மக்கள் கடந்த 63 ஆண்டுகளாக அசைவ உணவை முற்றிலும் தவிர்த்து முழுமையான சைவ உணவு முறையை மட்டுமே பின்பற்றி வருகின்றனர். தீபாவளி போன்ற முக்கிய திருவிழா நாள்களிலும், வெளியூர்களில் உள்ள சொந்தக்காரர்களின் வீடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் கூட இவர்கள் சைவ உணவு மட்டுமே உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து இக்கிராமத்திற்குத் திருமணமாகி வரும் பெண்களும் இந்த உன்னத பாரம்பரியத்தை மனமுவந்து ஏற்று சைவ முறைக்கு மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது.

உயிர் கொலையைத் தவிர்க்கும் வாழ்வியல்

இக்கிராம மக்கள் விலங்குகளைப் பாதுகாப்பதிலும், அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து விற்றால் அவை பிற்காலத்தில் பலியிடப்பட வாய்ப்புள்ளது என்பதால், இங்கு யாரும் கோழி அல்லது ஆடுகளை வளர்ப்பதில்லை. பசு மாடுகளை மட்டுமே வளர்த்துப் பராமரிக்கின்றனர். ஊருக்கு நடுவே உள்ள கண்மாயில் மீன்கள் செழிப்பாக இருந்தாலும், அவற்றை யாரும் பிடிப்பதில்லை. மேலும், விளைநிலங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பசு மாடுகளைக் குளிப்பாட்டிச் சிறப்பான உணவளித்து கவனித்துக் கொள்வதையும் இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

Also Read: டிவி பார்த்துகிட்டே சாப்பிடுறீங்களா? ஆயுர்வேதம் சொல்ற ஷாக் தகவல்!

பண்பாடும் தனித்துவமான அடையாளமும்

உணவுமுறை தாண்டி பல்வேறு நல்லொழுக்கங்களையும் இக்கிராம மக்கள் தங்கள் வாழ்க்கையில் உறுதியாகப் பின்பற்றி வருகிறார்கள். பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் எந்தவித மதுப்பழக்கமும் கிடையாது. வெளியூர்களிலிருந்து வரும் விருந்தினர்களை மிகுந்த அன்போடு உபசரித்து உணவளித்து அனுப்புகின்றனர். மேலும், வள்ளலாரின் மகாமந்திரமான “அருட்பெருஞ்ஜோதி”யின் அடிப்படையில், இக்கிராமத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘அ’ எழுத்தில் தொடங்கும் பெயர்களைச் சூட்டி மகிழ்கின்றனர். சன்மார்க்க நெறிமுறைகளின்படியே திருமண நிகழ்வுகளையும் நடத்தி, மனிதநேயமும் இயற்கையோடியைந்த வாழ்வும் நிறைந்த ஒரு முன்மாதிரி கிராமமாக வாடிமனைப்பட்டி திகழ்கிறது.

Follow Us