AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“அன்பில் மகேஷுக்கு ஜாமீன்?”.. நவ.17க்குள் போலீசார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Anbil Mahesh bail petition: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 17ஆம் தேதிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதோடு, ஜாமீன் மனு மீது காவல்துறை தரப்பு விரிவான பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

“அன்பில் மகேஷுக்கு ஜாமீன்?”.. நவ.17க்குள் போலீசார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அன்பில் மகேஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Nov 2026 12:46 PM IST

சென்னை, நவ.12: தமிழக அரசியல் மற்றும் கல்வித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுச் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் தரப்பில் சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, கடந்த 10ஆம் தேதி அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் அவரது வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க: தவெக ஆட்சியில் மீண்டும் சிறுமி கடத்தல் முயற்சி.. காவல்துறைக்கு விடப்பட்ட சவால்.. நயினார் நாகேந்திரன்!

உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு:

சிறப்பு நீதிமன்றத்தின் தள்ளுபடி உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழப்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் முறையிடப்பட்டது. இதனையடுத்து வழக்கின் நடைமுறைகள் முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் பலமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. “ஏற்கனவே உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தபோது இருந்த சூழ்நிலை தற்போது இல்லை; இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு எதிரிகளான முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்” என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

காவல்துறையின் அவகாசக் கோரிக்கை:

மனுதாரரின் வாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த வழக்கில் பல புதிய திருப்பங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த வழக்கின் இரண்டாவது எதிரியாகக் கருதப்படும் முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் சரணடைந்துள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான சரவணனும் சரணடைந்துள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பான விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்குத் திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதையும் படிக்க: “சர்ச்சைகளில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏக்கள்!”.. தனியாக அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய்!!

வழக்கில் அடுத்த கட்ட எதிர்பார்ப்பு:

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீது காவல்துறை தரப்பு விரிவான பதிலளிக்க வரும் நவம்பர் 17ஆம் தேதிக்கு உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், அதுவரை விசாரணை விவரங்களைக் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் நீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Follow Us