மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் வருகிறது நவீன சூப்பர் சைக்கிள்.. ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
Free Bicycles For Students : தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதற்காக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், 5.32 லட்சம் சைக்கிள்கள் வாங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச மாடர்ன் சைக்கிள் வழங்கப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில், நவீன சைக்கிள்கள் வாங்குவதற்காக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டிருந்தது. இதில், பல்வேறு சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்கள் டென்டரில் பங்கேற்றிருந்தன. இதில், ஹீரோ சைக்கிள் நிறுவனம் ஒப்பந்த புள்ளிதாரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மிக குறைந்த விலையில் அந்த நிறுவனம் நிர்ணயம் செய்ததன் காரணமாக இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக சுமார் 4 லட்சத்து 32 ஆயிரத்து 344 சைக்கிள்கள் வாங்கப்பட உள்ளன.
இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 392 கோடி
இதில், பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் தலா ரூ. 7,235 எனவும், மாணவிகளுக்கான சைக்கிள் தலா ரூ. 7,426 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் மொத்த செலவு ரூ. 392 கோடியாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ. 277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது, இந்த திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 115 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.2,500 மகளிர் உரிமை தொகை வழங்க தாமதம் ஏன்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த விளக்கம்.. என்ன அது!




அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
விரைவில் இதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நாம் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் இடையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அதி நவீன சைக்கிள்களில் என்னென்ன இருக்கும்
இந்த திட்டத்தின் கீழ், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் போல அல்லாமல், அதில் நவீன சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதில்,
- மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறம்.
- மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
- தண்ணீர் பாட்டில்கள் வைக்கும் இடம்.
- பிரேக்கிங் சிஸ்டம்.
- சைக்கிள்கள் எடை குறைவாகவும் வலுவாகவும் இருக்கும்.
- சைக்கிள் முன்புறமும், பின்புறமும் ஒளிரும் ஸ்டிக்கர்கள்.
- ஹெல்மெட் வைக்கும் இடம்.
- தண்ணீர் பாட்டில்.
விரைவில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் விநியோகம்
ஆகியவை இருக்கம் வகையில் புதுவிதமான சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. தற்போது, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் சைக்கிள்கள் தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்க்கு மத்திய அரசிடம் இருந்து வந்த பாராட்டு.. ஏன்.. எதற்காக.. முழு விவரம்!