AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் ஜேசன் மாதிரியே கத்திக்காட்டிய ரம்யா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவர் ஜேசன் போலவே கத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் ஜேசன் மாதிரியே கத்திக்காட்டிய ரம்யா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ
ரம்யா கிருஷ்ணன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2026 19:46 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது 7-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 8-வது சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. இவர் வந்ததில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் வாரம் வாரம் போட்டியாளர்களிடையே வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகள் குறித்து இவரே பேசி வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். முன்னதாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய போதும் ஒரு முறை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பிக்பாஸ்ச் தமிழ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிலையில் இன்று மதியத்திலிருந்து இன்றைய நாளிற்கான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. முதல் இரண்டு புரோமோ வீடியோக்களில் ரம்யா கிருஷ்ணன் குறித்து வெளியான நிலையில் அடுத்த மூன்று வீடியோக்களில் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே ரம்யா கிருஷ்ணன் பேசுவது காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸில் ஜேசன் மாதிரியே கத்திக்காட்டிய ரம்யா கிருஷ்ணன்:

அதன்படி தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான 5-வது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரம் முனியம்மாள் மற்றும் ஜேசன் இடையே நடைப்பெற்ற சண்டை குறித்து அவர் பேசுகிறார். மேலும் அந்த சண்டையின் போது ஜேசன் பிக்பாஸ் வீட்டில் எப்படி கத்தினாரோ அதே மாதிரி ரம்யா கிருஷ்ணன் கத்திக் காட்டுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… எனது ஆதரவு ப்ளூ டீம்-க்குதான்.. ஜேசனால் ப்ளூ டீம் இடையே ஏற்பட்ட பிரச்சனை!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Prabhas: பைரவா இஸ் பேக்.. பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி 2 பட BTS-ஐ வெளியிட்ட படக்குழு!

Follow Us