பிக்பாஸில் நீல அணியின் வெற்றியை திருடும் சிவப்பு அணி… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் சர்வைவல் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய புரோமோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து 6 வாரங்கள் முடிவடைந்து தற்போது 7-வது வாரத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதுப் புது டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வாரமும் அந்த டாஸ்குகளில் சிறப்பாக விளையாடும் போட்டியாளர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த 7-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் சர்வைவல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சிவப்பு மற்றும் நீலம் என இரண்டு அணிகலாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்கில் வழங்கப்படும் போட்டிகளில் வெற்றிப் பெறும் அணியினருக்கு தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.
இந்த போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்த போது சிவப்பு நிற அணியில் உள்ளவர்கள் வலுபெற்றவர்களாக தெரிந்த நிலையில் இந்த டாஸ்குகளில் தொடர்ந்து நீல நிற அணியினரே அதிக அளவில் வெற்றிகளைப் பெற்று சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற டாஸ்குகளில் அதிக அளவில் நீல நிற அணியினர் வெற்றிப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் நீல அணியின் வெற்றியை திருடும் சிவப்பு அணி:
இந்த நிலையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சிவப்பு நிற அணியினர் எந்த பொருளும் இல்லாம இருந்த நிலையில் எதிரணியினர் நீல நிற அணியினர் வெற்றிப் பெற்று வைத்துள்ள பொருட்களை திருடி பயண்படுத்தி வருகின்றனர். இதனால் கோபமடைந்த நீல நிற அணியினர் கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day46 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/fOHN9gmiiC
— Vijay Television (@vijaytelevision) October 22, 2026
Also Read… சூர்யாவின் சீன் படம் தீபாவளிக்கு ரிலீஸாக இதுதான் காரணமா? வைரலாகும் தகவல்