AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கத்தி படத்தின் இந்தி ரீமேக் உரிமையைப் பெற்ற பிரபல இயக்குநர்? வைரலாகும் தக்வல்

Kaththi movie Hindi remake rights update | நடிகர் தளபதி விஜய் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கத்தி. இந்தப் படத்தினை இந்தி மொழியில் ரீமேக் செய்ய பிரபல இயக்குநர் உரிமைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தி படத்தின் இந்தி ரீமேக் உரிமையைப் பெற்ற பிரபல இயக்குநர்? வைரலாகும் தக்வல்
கத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Oct 2026 15:01 PM IST

இந்திய சினிமாவைப் பொருத்த வரை ஒரு மொழியில் வெளியாகும் சிறந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செயவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அப்படி ரீமேக் செய்யப்படும் படங்களில் பலவற்றில் வெற்றியையும் சில படங்கள் தோல்வியை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றால் ஒரு மொழியில் வெற்றியடைந்த அந்தப் படத்தின் இயல்பு ரீமேக் செய்யப்பட்ட மொழியில் சரியான உணர்வுகளைக் கடத்த தவறி இருக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாக உள்ளது கத்தி. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தை இந்தி சினிமாவில் ரீமேக் செய்ய வேண்டும் என்று பேச்சு நிலவி வந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகின்றது. இதற்கு இடையே தமிழ் சினிமாவில் மீண்டும் கத்தி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

கத்தி படத்தின் இந்தி ரீமேக் உரிமையைப் பெற்ற பிரபல இயக்குநர்?

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தி சினிமாவில் நடிகர் தளபதி விஜயின் கத்தி படத்தை ரீமேக் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. அதன்படி தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான கத்தியின் இந்தி ரீமேக் உரிமையை சஞ்சய் லீலா பன்சாலி வாங்கினார். ஆனால், அந்த ரீமேக் பணிகள் தொடங்குவதற்கு முன்பே, கத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற நாணயச் சண்டை காட்சியால் ஈர்க்கப்பட்ட சில திரைப்படங்களில், அதே போன்ற காட்சிகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது நானியின் தி பாரடைஸ் படக்குழு… எப்போ எந்த ஓடிடி தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Nelson Dilipkumar: திரையரங்குகள் அதிர்கின்றன..! ஜெயிலர் 2 படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு நன்றி சொன்ன இயக்குநர் நெல்சன்!

Follow Us