AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனது இறுதி மூச்சுள்ள வரைக்கும்.. இணையத்தில் வைரலாகும் ஜோதிகா – சூர்யாவின் திருமண வீடியோ!

Suriya Jyothika 20th Wedding Anniversary: தென்னிந்திய மக்கள் மத்தியில் சினிமாவில், நிஜத்திலும் சிறப்பான ஜோடியாக இருந்துவருபவர்கள்தான் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் தங்களின் 20வது திருமண நாளில், கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட நிலையில், அது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

எனது இறுதி மூச்சுள்ள வரைக்கும்.. இணையத்தில் வைரலாகும் ஜோதிகா – சூர்யாவின் திருமண வீடியோ!
ஜோதிகா மற்றும் சூர்யாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Oct 2026 18:31 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் பேமஸான நாயகனாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 54 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் சீன் (Scene) மற்றும் சூர்யா48 (Suriya48) போன்ற திரைப்படங்கள் உள்ளது. தற்போது சூர்யாவிற்கு பொன்னான வருடமாக இந்த 2026ம் ஆண்டு உள்ளது. அந்த விதத்தில் இந்த வருடத்தில் தனது 20வது வருட திருமண நாளையும் சிறப்பாக வெளிநாட்டில் வைத்து கொண்டாடியிருந்தார். சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா (Suriya and Jyothika) இருவருமே கடந்த 2006ம் ஆண்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்த 2026ம் ஆண்டில் தங்களின் 20வது திருமண நாளை கிறிஸ்தவ முறைப்படி வெளிநாட்டில் வைத்து பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தனர். தற்போது அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது நானியின் தி பாரடைஸ் படக்குழு… எப்போ எந்த ஓடிடி தெரியுமா?

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 20வது ஆண்டு திருமண விழா குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு:

நடிகர் சூர்யா தற்போது தமிழ் திரைப்படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவரும் நிலையில், அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த விதத்தில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் தங்களின் 20வது ஆண்டு திருமண நாளை கிறிஸ்தவ முறைப்படி சிறப்பாக கொண்டாடியிருந்தனர். அந்த விதத்தில் இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகிவந்தது.

இதையும் படிங்க: றெக்க மட்டும் இருந்தா தேவதை சார்… 9 ஆண்டுகளைக் கடந்தது மேயாத மான் படம் – இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட பதிவு!

இந்நிலையில் தற்போது இவர்களின் திருமண நாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது வெளியான வீடியோவில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் கிறிஸ்தவ முறை திருமணம், திருமண முன் மற்றும் பின் கொண்டாட்டங்கள் தொடர்பான விஷயங்கள் இந்த வீடியோவில் அடங்கியுள்ளது. தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த திருமண நாளை சூர்யா மற்றும் ஜோதிகா கொண்டாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us