AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

றெக்க மட்டும் இருந்தா தேவதை சார்… 9 ஆண்டுகளைக் கடந்தது மேயாத மான் படம் – இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட பதிவு!

9 Years Of Meyaadha Maan Movie | தமிழ் சினிமாவில் இயக்குநர் ராம்குமார் இயக்கதில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் மேயாத மான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இயக்குநர் ரத்னகுமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

றெக்க மட்டும் இருந்தா தேவதை சார்… 9 ஆண்டுகளைக் கடந்தது மேயாத மான் படம் – இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட பதிவு!
மேயாத மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2026 14:31 PM IST

குறும்படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ரத்னகுமார். இவர் தமிழ் இச்னிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனது மேயாத மான் என்ற படத்தின் மூலம் தான். இந்தப் படத்தை எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த மேயாத மான் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ரத்ன குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தப் படத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். அவர்களுடன் இணைந்து நடிகர்கள் விவேக் பிரசன்னா, இந்துஜா ரவிசந்திரன், அருண் பிரசாத், அம்ருதா ஸ்ரீனிவாசன், மேத்யூ வர்கீஸ், சுஜாதா சஞ்சு என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேயாத மான் படம் குறித்து ரத்னகுமார் வெளியிட்ட பதிவு:

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகும், இந்தச் சின்னஞ்சிறு படத்திற்கு அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. எனது அடுத்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும். மெர்சலுடன் தீபாவளிக்கு வெளியானதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். ஒரு அறிமுகப் படத்திற்கு இதைவிட அதிகமாக என்ன வேண்டும்? ஸ்டோன் பெஞ்சர்ஸ், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். பிரபஞ்சத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Rajinikanth: சொக்கத் தங்கம்.. மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ!

ரத்னகுமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வெளியானது அப்டேட்

Follow Us