AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jyothika: கருப்பு பட கடைசி 10 நிமிடம்.. சூர்யா கொளுத்திட்டாரு – பெருமையாக பேசிய ஜோதிகா!

Jyothika on Suriyas Karuppu Triumph: சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி பிரபலமான ஜோடிகளாக இருந்துவருபவர்கள் சூர்யா ஜோதிகா. சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் கருப்பு படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று ஹிட்டாகியிருந்தது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஜோதிகா, கருப்பு படம் மற்றும் சூர்யாவின் நடிப்பு பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

Jyothika: கருப்பு பட கடைசி 10 நிமிடம்.. சூர்யா கொளுத்திட்டாரு – பெருமையாக பேசிய ஜோதிகா!
கருப்பு திரைப்படம் பற்றி ஜோதிகாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 May 2026 17:59 PM IST

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்துவந்தவர் ஜோதிகா (Jyothika). இவர் தற்போது தமிழ் சினிமாவில் பெரிதும் திரைப்படங்ககளில் நடிக்கவில்லை. இவர் இறுதியாக தமிழில் உடன்பிறப்பே (Udanpirappe) என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், அதையடுத்து தமிழ் சினிமாவில் அவருக்கு வரவேற்பு மற்றும் போதிய மரியாதையை கிடைக்காததால் அவர் மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள், வெப் சீரிஸில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் இவரின் நடிப்பில் சிஸ்டம் (system) என்ற இந்தி படமானது தயாராகியுள்ள நிலையில், இது தற்போது ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இவர் நடித்த கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.

தற்போது முழுக்க இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடிப்பதை தீவிரம் காட்டிவருகிறார் ஜோதிகா. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இவர், சூர்யாவின் (Suriya) கருப்பு (Karuppu) திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு மற்றும் சூர்யாவின் நடிப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜான் – வைரலாகும் வீடியோ

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை பற்றி பெருமையாக பேசிய நடிகை ஜோதிகா:

அந்த நேர்காணலில் ஜோதிகா பேசுகையில், “கருப்பு திரைப்படத்தின் கடைசி 10 நிமிடங்களில், சூர்யா உண்மையிலே பிரமாதமாக நடித்திருந்தார். சூர்யாவிற்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என நினைத்தேன், அது இப்பொது நடந்துவிட்டது. நாங்கள் அந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து நெகிழ்த்துவிட்டோம். வீட்டில் அவருக்கும் கிடைக்கும் அன்பையும் கொண்டாட்டத்தையும் கண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என அந்த நேர்காணலில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு

சூர்யா மற்றும் ஜோதிகா தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள் என அனைவருக்குமே தெரியும். இவர்கள் இருவருக்கும் தேவ் மற்றும் தியா என இரு குழந்தைகள் உள்ளார்கள். சென்னையில் வசித்துவந்த சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது முழுமையாக மும்பையில் குடியேறியுள்ளனர். தனது குழந்தைகளின் படிப்பு மற்றும் மனைவி ஜோதிகாவின் சினிமாவிற்காகவும் சூர்யா இந்த முடிவை எடுத்திருந்தார் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது கருப்பு படமானது சூர்யாவிற்கு வெற்றி திரைப்படமாக அமைந்த நிலையில், அதை பாராட்டியும் பெருமையாகவும் ஜோதிகா பகிர்ந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Follow Us