AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ravi Mohan: ஆன்மிக பாதையில்.. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ரவி மோகன்!

Ravi Mohan Begins Sabarimala Vratham: ரவி மோகனை பற்றி சமீபகாலமாகவே இணையதளங்களில் பேசப்பட்டுவருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பாக பேட்டி கொடுத்திருந்த நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் இவர் சபரிமலைக்கு மாலையணிந்து விரதத்தை தொடங்கியதாக புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ravi Mohan: ஆன்மிக பாதையில்.. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ரவி மோகன்!
ரவி மோகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 May 2026 16:25 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமிக்க நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் ரவி மோகன் பல ஆண்டுகளுக்கு பிறகு வில்லனாக இப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார். இப்படம் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இதையடுத்து கராத்தே பாபு (Karathey babu), ப்ரோ கோட் மற்றும் தனது இயக்கத்தில் அன் ஆர்டினரி மேன் போன்ற படங்களில் பணியாற்றிவந்தார். அந்த வகையில் தனது விவாகரத்து பிரச்சனை மற்றும் தனது தோழி கெனிஷா பிராஸிஸிற்கு (Keneesha francis) நடந்த சைபர்புல்லிங் தொடர்பாக பரபரப்பாகவும், கோபமாகவும் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு விவாகரத்து கிடைக்கும்வரையில் எந்த படத்திலும் நடிக்கமாட்டேன் என அதில் அவர் கூறியிருந்தார். அந்த வகையில், இன்று 2026 மே 20ம் தேதியில் சபரிமலைக்கு மாலையணிந்து வீரத்தை தொடங்கியுள்ளாராம். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பயத்தில் அந்த படத்திற்கு முதலில் நோ சொல்லிட்டேன்.. ஆனால் மேஜிக் மாதிரி அது நடந்தது – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!

சபரிமலைக்கு மாலையணிந்து விரதத்தை ரவி மோகன் தொடங்கியது குறித்து வைரலாக புகைப்படங்கள் :

நடிகர் ரவி மோகன் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில், தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இன்னும் இவர்களின் விவாகரத்து பிரச்சனையானது என்ற நிலையில், ரவி மோகன் சமீபகாலமாக அவரின் நெருங்கிய தோழியும், பாடகியான் கெனிஷா என்பவருடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திருந்தார். கோவிலில், வெக்கேஷன் மற்றும் பொது இடங்களில் கெனிஷாவுடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீப நாட்களாக கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை மிரட்டுவது போன்றும், தவறாக பேசுவதுபோன்றும் சைபர்புல்லிங் செய்வதாகவும், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் பிரச்சனைக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, நான் சமூக ஊடகங்களிலிருந்தும், சென்னையிலிருந்து வெளியேறுகிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வாடிவாசல் படம் சூர்யாவின் கெரியரில் ஆல் டைம் ஹிட்டாக இருக்கும்.. ஆனால் – மிஷ்கின் பேச்சு!

இது மிகப்பெரும் பேச்சாக இருந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ரவி மோகன், செய்தியாளர்களை தனது இல்லத்தில் நேராக சந்தித்து பரபரப்பு பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவாகரத்து கிடைக்கும்வரை படங்களில் நடிக்கமாட்டேன் என அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சபரிமலைக்கு மாலையணிந்து விரதத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us