Gladiators: அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ஆவணப்படம் கிளாடியேட்டர்ஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Ajith Gladiators Documentary: தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக கார் ரேஸில் தீவிரமாக இருந்துவருகிறார். அந்த வகையில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் இவரின் கார் ரேஸ் ஆவணப்படமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அதன் ரிலீஸ் எப்போது என்பது குறித்து தகவல்கள் வைரலாகிவருகிறது.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி (Good bad Ugly) என்ற திரைப்படமானது, கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்த நிலையில், அப்போதிருந்தே அஜித் குமார் கார் ரேஸ் (Car Race) பயிற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இந்தியாவின் சார்பாக உலகநாடுகளில் நடக்கும், சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்றுவந்தார். இந்தியா மற்றும் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் வித்தகமாவே அவரின் கார் ரேஸ் அணியின் லோகோவையே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிட்டத்தட்ட 6 கார் ரேஸ் போட்டிகளுக்கும் மேல் கலந்துகொண்டு பல வெற்றிக்கோப்பைகளை அஜித் குமாரின் அணியானது பெற்றுள்ளது.
இவரின் கார் ரேஸானது ஆவணப்படமாக இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 2026ம் ஆண்டில் வெளியாகும் விதத்தில், அஜித் குமார் என்பதை படங்களிலும் நடிக்கவில்லை என்ற நிலையில், 2026ம் ஆண்டில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ட்ரீட்டாக “கிளாடியேட்டர்ஸ்” (Gladiators) என்ற அஜித் குமாரின் ஆவணப்படமானது வெளியாக தயாராகியுள்ளது.




இதையும் படிங்க: டிமாண்டி காலனி 3 தீவிர திகில் திரைப்படமாக இருக்கும் – அப்டேட் கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து!
அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆணவப்படத்தின் ரிலீஸ் எப்போது:
அஜித் குமாரின் ஆவணப்படமானது கிளாடியேட்டர்ஸ் என்ற தலைப்பில் உருவாகியுள்ள நிலையில், இதன் முதல் மோஷன் போஸ்டர் கடந்த 2026 மே 1ம் தேதியில் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். அந்த வகையில் இது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: சிறப்பாக தொடங்கியது சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஷூட்டிங் – படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!
அந்த வகையில் இப்படமானது விறுவிறுப்பாகி தயாராகிவரும் நிலையில், வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
Ajith Kumar Sports Services LLC presents
GLADIATORS – In Pursuit of Challenges #Gladiators is a film on Ajith Kumar’s Motorsport journey, Chasing the impossible. The race begins soon.. Releasing soon in theatres 📽️🍿https://t.co/27pwPuCPYAWitnessed and Captured by #Vijay…
— Suresh Chandra (@SureshChandraa) May 1, 2026
இந்த கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவரும் நிலையில், அஜித் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தின் தயாரித்துவருகிறது. அஜித் தற்போது லீ மான்ஸ் போட்டிக்கான பயிற்சியில் இருக்கும் நிலையில், தனது அணியுடன் விரைவில் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.