AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பர்த் டே ஸ்பெஷெல் – வெளியான அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டைட்டில் டீசர்

நடிகர் அஜித் குமார் தற்போது அஜித்குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கி தீவிரமாக கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது அவரது அணி வெற்றிகளையும் குவிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவரது ரேசிங் பயணத்தை ரசிகர்களுக்காக டாக்குமென்ட்ரி படமாக உருவாகியுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பர்த் டே ஸ்பெஷெல் – வெளியான அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டைட்டில் டீசர்
அஜித் குமாரின் கிளேடியட்டர்ஸ் பட டீசர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 May 2026 19:48 PM IST

நடிகர் அஜித் குமார் தற்போது அஜித்குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கி தீவிரமாக கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது அவரது அணி வெற்றிகளையும் குவிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவரது ரேசிங் பயணத்தை ரசிகர்களுக்காக டாக்குமென்ட்ரி படமாக உருவாகியுள்ளது. இதற்கு கிளாடியேட்டர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் பட  டீசர்

 

அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அஜித் குமார் தற்போது தீவிரமாக உலக அளவில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க : Kara Movie: தனுஷின் வாழ்க்கையிலே முதல் முறை.. கர திரைப்படம் செய்திருக்கும் புது சாதனை.. என்ன தெரியுமா?

அதன் ஒரு பகுதியாக பெல்ஜியமில் நடைபெற்ற சவாலா 24 மணி நேர கார் ரேசில் அஜித் குமாரின் ரேசிங் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. அஜித்குமார் ரேசிங் மற்றும் ரெட் அண்ட் ரேசிங் இணைந்து பெல்ஜியத்தில் உள்ள மெச்செலின் உலகின் மிக சவாலான ரேசிங் தளத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றனர். இந்த தொடரில் தான் அஜித் குமாரின் ரேசிங் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தியது.

இந்த வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் இந்திய தேசிய கொடியை பிடித்தபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது ரேசிங் பயணம் தற்போது கிளாடியேட்டர்ஸ் என்ற டாக்குமென்ட்ரி படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் விஜய்யின் மேற்பார்வையில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதற்கான டைட்டில் டீச்சர் அஜித்தின் பிறந்த நாளான மே 1, 2026 இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிக்க : வண்டார்கொடி என் வண்ணக்கிளி என் உள்ளாரா உன்னால காயம் – சூர்யாவின் நடிப்பில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரெட்ரோ ஒரு ஆண்டு நிறைவடைந்தது

இந்த நிலையில் அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Follow Us