AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Seyon: சிறப்பாக தொடங்கியது சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஷூட்டிங் – படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!

Seyon Movie Shooting Pooja: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கிவரும் திரைப்படம்தான் சேயோன். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் விதத்தில், இதன் ஷூட்டிங் பூஜை, 18/05/2026ல் நடந்தது. அந்த வகையில், ஷூட்டிங் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

Seyon: சிறப்பாக தொடங்கியது சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஷூட்டிங் – படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!
சேயோன் திரைப்பட படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 May 2026 14:39 PM IST

சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் பராசக்தி (Parasakthi). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் வெளியாகியதிருந்த இப்படமானது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது. அந்த வகையில் இப்படமானது மொத்தமாக ரூ 100 கோடிகள் வசூலித்திருந்தாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தை அடுத்தாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட படம்தான் சேயோன் (Seyon). இதை தாய் கிழவி படத்தை (Thaai Kizhavi) இயக்கியிருந்த சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. இப்படமானது முருகன் மற்றும் விருமாண்டி சாமியின் கதையை மையமாக கொண்டு இயக்கப்படவுள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் 2026 மே 18ம் தேதியில் பூஜையோடு தொடங்கியிருந்தது.

இப்படத்தின் பூஜையில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சிவகுமார் முருகேசன், பாலா சரவணன், ரேச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று 2026 மே 19ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: மல்யுத்த வீரனாக ராம் சரண்.. ரசிகர்களை கவர்ந்துவரும் பெத்தி படத்தின் அதிரடி ட்ரெய்லர்!

சேயோன் படத்தின் ஷூட்டிங் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு:

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:

சேயோன் திரைப்படத்தை வரும் 2026 அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை விடுமுறையின்போது வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. மேலும் கமல்ஹாசனின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படம் 2027ம் ஆண்டு பொங்கலோடு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் ரஜினிகாந்தின் 173வது படத்தின் இயக்குநர் முடிவாகவில்லை என்ற நிலையில், இன்னும் இதன் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போகிறது. அந்த வாகையில், சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தினை வரும் 2027ம் ஆண்டு பொங்கலோடு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளாராம்.

இதையும் படிங்க: சல்மான்கானின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு.. அடுத்து நடந்தது என்ன?

சிவகார்த்திகேயனின் இப்படத்திற்கு முதல் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் இடம்பெற்றிருந்த தீம் பாடலே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பாக்கப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் மதுரையில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 21 நாட்கள் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அந்த வகையில் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதிசெய்யப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us