AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை தொடங்குகிறது சேயோன் படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட வீடியோ!

Shooting for the film Seyon begins tomorrow | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 26-வது படமாக உருவாக உள்ளது சேயோன் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு தற்போது தெரிவித்துள்ளது.

நாளை தொடங்குகிறது சேயோன் படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட வீடியோ!
சேயோன் படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 May 2026 17:50 PM IST

சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் சினிமாவில் காமெடி நடிகராக தனது நடிப்பு பணியைத் தொடங்கி இருந்தாலும் அதனைத் தொடர்ந்து இவர் மெரினா என்ற படத்தின் மூலமாக நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இந்தப் படத்தில் இவருக்கு பெரிய அளவில் முக்கியதுவம் அளிக்கப்படவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து  இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து சமீப காலமாக கதைகளுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் சேயோன்.

நாளை தொடங்குகிறது சேயோன் படத்தின் ஷூட்டிங்:

இந்தப் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ள நிலையில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தின் அறிமுக வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… பிச்சைக்காரன் படத்தையே இந்த நூறு சாமி மிஞ்சிவிடும் – விஜய் ஆண்டனி ஓபன் டாக்

சேயோன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Karuppu: திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கருப்பு.. பாராட்டி பதிவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்!

Follow Us