AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிச்சைக்காரன் படத்தையே இந்த நூறு சாமி மிஞ்சிவிடும் – விஜய் ஆண்டனி ஓபன் டாக்

Vijay Antony said the Nooru Saami movie is better than Pichaikkaran movie : தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய போது பிச்சைக்காரன் படத்தை விட நூறு சாமி படம் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன் படத்தையே இந்த நூறு சாமி மிஞ்சிவிடும் – விஜய் ஆண்டனி ஓபன் டாக்
நூறு சாமி படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 May 2026 14:40 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் 90ஸ் கிட்ஸ்கள் விஜய் ஆண்டனியின் பாடல்களை சிலாகித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக பிசியாக வலம் வந்த விஜய் ஆண்டனி பிறகு தமிழ் சினிமாவில் நாயகன் அவதாரம் எடுத்தார். இவர் இசையமைத்த படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடித்து வெளியான படங்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி அடுத்தடுத்து முழு நேரமும் படங்களில் நாயகனாக நடிப்பதையே கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண்டனி. மேலும் அவர் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

தொடர்ந்து இசையமைப்பு நடிப்பு என்று பிசியாக வலம் வரும் விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்தும் வந்தார். அந்த வரிசையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் நூறு சாமி. இந்தப் படத்தை இயக்குநர் சசி எழுதி இயக்கி உள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக பிச்சைக்காரன் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நூறு சாமி படம் குறித்து சமீபத்தில் விஜய் ஆண்டனி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிச்சைக்காரன் படத்தையே இந்த நூறு சாமி மிஞ்சிவிடும்:

‘பிச்சைக்காரன்’ படத்தை முடித்த பிறகு, அதற்கு இணையான அல்லது அதை மிஞ்சக்கூடிய ஒரு கதையை வேறு யாராவது எப்படி உருவாக்க முடியும் என்றே நான் தொடர்ந்து வியந்துகொண்டிருந்தேன். அது என் திரைப்பயணத்திலேயே மிகச்சிறந்த படமாக அமைந்திருந்தது. ஆனால் இப்போது, ​​ஐயா அவர்கள் ‘பிச்சைக்காரன்’ படத்தையும் மிஞ்சக்கூடிய வகையில் ஒரு கதையை எழுதியிருக்கிறார்.

இது ஒரு அற்புதமான கதை. தாய் பாசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோலவே மிக முக்கியமான வேறொரு உணர்வும் இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. கதையில் நாங்கள் சில திருப்பங்களை (suspense) அமைத்துள்ளதால், என்னால் இதைப்பற்றி இதற்கு மேல் விரிவாக எதுவும் கூற இயலாது என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… மேற்கு ஆசியாவில் நிலவும் தொடர் நெருக்கடி… திரைத்துறையினருக்கு கமல் ஹாசன் விடுத்த கோரிக்கை – வைரலாகும் எக்ஸ் பதிவு

இணையத்தில் வைரலாகும் விஜய் ஆண்டனி பேச்சு:

Also Read… எம்.ஜி.ஆர் போல மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற வேண்டும் – முதல்வர் விஜய்க்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்து..

Follow Us