மம்முட்டி எனக்கு கொடுத்த அங்கீகாரம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
Director Seenu Ramasamy about Mammootty | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் சமீபத்தில் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் மம்முட்டி குறித்து நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை வெளியிட்டது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறார். நடிகர் மம்முட்டி அவ்வபோது தமிழ் சினிமாவில் நடித்தாலும் அவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை. தொடர்ந்து தமிழ் மக்களுக்கும் மம்முட்டிக்கும் இடையே இருக்கும் பந்தம் என்பது நீடித்துக்கொண்டே இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தமிழ் நாட்டிற்கு ஷூட்டிங்கிற்காக வந்த நடிகர் மம்முட்டி இரவு மீண்டும் கேரளாவிற்கு செல்லும் போது வழிதவறிய நிலையில் தமிழ் நாட்டைச்சேர்ந்த நபர் ஒருவர் உதவி செய்தார். தனக்கு சுமார் 15 கிலோமீட்டர் வரை வந்து உதயவிய நபரை தனது நண்பர் என்று கூறி தோலில் கை போட்டு மம்முட்டி புகைப்படம் எடுத்துள்ளார்.
அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. மேலும் வழி காட்டிய அந்த நபருக்கு பாராட்டு ஒருபக்கமும் தனக்கு வழிகாட்டிய நபரை மம்முட்டி நடத்திய விதத்தையும் பார்த்து பாராட்டி வந்தனர். இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி அந்த வீடியோவை பகிர்ந்து தனக்கு மம்முட்டி உடன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மம்முட்டி எனக்கு கொடுத்த அங்கீகாரம்:
அந்த பதிவில் சீனு ராமசாமி பேசியதாவது, ‘மாமனிதன்’ திரைப்படத்தின் கதையை அவருக்கு நான் சொல்வதற்கு உதவியவர் என் நண்பர் இயக்குநர் ராம். அப்பொழுது அவர் நோன்பில் இருந்தார். ஒரு ஈசிச்சேரில் சாய்ந்தபடியே முழுக்கதையையும் கேட்டார். அவ்வளவுதான் எனக்கும் அவருக்குமான சந்திப்பு. அந்தப் படத்தை அவரை வைத்து என்னால் எடுக்க முடியவில்லை.
அதன் பிறகு, கேரளாவில் நடந்த ஒரு திருமண விழாவில் கூட்ட நெரிசலால் அருகில் செல்ல முடியவில்லை. ஆயினும் என்னைக் கடந்து சென்றவரிடம், “வணக்கம் சார் ” என்றேன். சென்றவர் நின்று, இரண்டடி பின்னோக்கி வந்து என் கைகளைப் பற்றிச் சிரித்துவிட்டுச் சென்றார்.
அந்த அங்கீகாரம் என் மனதை மிகவும் தொட்டது. எனக்காக அவர் பின்னோக்கி வந்த அந்த இரண்டடி எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என் அருகில் இருந்த உதவியாளரிடம் சொன்னேன்: “இந்த இரண்டடிதான் சினிமாவில் நான் பெற்ற ஆசீர்வாதம்!” உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்… விஸ்வநாத் & சன்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
சீனு ராமசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
‘மாமனிதன்’ திரைப்படத்தின் கதையை அவருக்கு நான் சொல்வதற்கு உதவியவர் என் நண்பர் இயக்குநர் ராம். அப்பொழுது அவர் நோன்பில் இருந்தார்.
ஒரு ஈசிச்சேரில் சாய்ந்தபடியே முழுக்கதையையும் கேட்டார். அவ்வளவுதான் எனக்கும் அவருக்குமான சந்திப்பு.
அந்தப் படத்தை அவரை வைத்து என்னால் எடுக்க… https://t.co/bSBQOphRO4
— Seenu Ramasamy (@seenuramasamy) August 15, 2026
Also Read… மீண்டும் ஒரு ஃபீல் குட் படம்… வைரலாகும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ட்ரெய்லர்