AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் ஒரு ஃபீல் குட் படம்… வைரலாகும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ட்ரெய்லர்

Bethlehem Kudumba Unit Official Trailer | நடிகர் நிவின் பாலி நாயகனாகவும் நடிகை மமிதா பைஜூ நாயகனாகவும் நடித்து உள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மீண்டும் ஒரு ஃபீல் குட் படம்… வைரலாகும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ட்ரெய்லர்
பெத்தலேக குடும்ப யூனிட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Aug 2026 12:31 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய போதே படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷானவாஸ், ஷியாம் மோகன், ஷமீர் கான், ஸ்ரீந்தா, பார்வதி அய்யப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், ஸ்ரீரஞ்சினி, வினீத் விஸ்வம், பிந்து பணிக்கர், வெட்டுகிளி பிரகாஷ், தங்கம் மோகன், மஞ்சுஸ்ரீ, ஜெயசங்கர் மற்றும் அபிரிமுத்தோம் என பலர் இந்தப் படத்தில் இணைந்து நடித்து உள்ளனர்.

வைரலாகும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ட்ரெய்லர்:

இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி உள்ள இந்த பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்த்து காணப்படுகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது

பெத்தலேக குடும்ப யூனிட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… செப்டம்பருக்கு தள்ளிப்போன துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ்… சோகத்தில் ரசிகர்கள்

Follow Us