AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் வெளியாகும் மண்டாட்டி படத்தின் 2-வது சிங்கிள் – சூரி கொடுத்த சூப்பர் அப்டேட்

Mandaadi Movie 2nd Single Update Viral On Social Media | நடிகர் சூரி தற்போது நாயகனாக நடித்து வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

விரைவில் வெளியாகும் மண்டாட்டி படத்தின் 2-வது சிங்கிள் – சூரி கொடுத்த சூப்பர் அப்டேட்
மண்டாட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2026 12:33 PM IST

சினிமாவில் நாயகனாக நடித்து தோல்வியை சந்திப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கும் போது ஒரு பக்கம் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிறகு நாயகனாக உச்சத்தில் செல்பவர்களும் உண்டு. அந்த வகையில் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சூரி. இவர் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவரது நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தற்போது அவர் நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை நடிகர் சூரி தற்போது தவிர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல அடுத்ததாக வெளியாக உள்ள மண்டாட்டி படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விரைவில் வெளியாகும் மண்டாட்டி படத்தின் 2-வது சிங்கிள்:

இந்தப் படத்தின் முதல் சிங்கிள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இரண்டாவதாக உருவாகி உள்ள சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இனையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இணையத்தில் வைரலாகும் டாக்ஸிக் படத்தின் ரன் டைம் மற்றும் சென்சார் அப்டேட்

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டிசி படத்தின் கதையை அருண் மாதேஸ்வரன் முதலில் யாருக்கு சொன்னார் தெரியுமா? வைரலாகும் தகவல்

Follow Us